குடிகார சவகாசம் குல நாசம்.. பிறந்த நாளை இறந்த நாளாக்கிய நண்பர்கள்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!

Published : Jun 01, 2022, 12:06 PM ISTUpdated : Jun 01, 2022, 12:08 PM IST
குடிகார சவகாசம் குல நாசம்.. பிறந்த நாளை இறந்த நாளாக்கிய நண்பர்கள்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!

சுருக்கம்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அமலாதி கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(21). பிளம்பிங் மற்றும்  எலக்ட்ரிசனாக பணியாற்றி வந்துள்ளார். தனது பிறந்த நாளையொட்டி மாரிமுத்து நண்பர்களான ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகியோருக்கு மதுவிருந்து வைத்துள்ளார். 

பிறந்தநாள் கொண்டாடும்  விதமாக நண்பர்களுக்கு மது விருந்து அளித்த இளைஞர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அமலாதி கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(21). பிளம்பிங் மற்றும்  எலக்ட்ரிசனாக பணியாற்றி வந்துள்ளார். தனது பிறந்த நாளையொட்டி மாரிமுத்து நண்பர்களான ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகியோருக்கு மதுவிருந்து வைத்துள்ளார். மாரிமுத்துக்கு கேக் வாங்கி வந்த நண்பர்கள் அவரை கேக் வெட்ட வைத்துள்ளனர். மாரி கேக் வெட்டியதும் கேக்கை எடுத்து அவர் முகத்தில் பூசிய நண்பர்கள் விளையாடிக்கொண்டிருந்த திடீரென இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

அப்போது, ராமமூர்த்தி பர்த்டே பேபி மாரிமுத்துவை கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதில், மாரிமுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த நண்பர்கள் மாரிமுத்துவை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சோழவரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனையடுத்து, அவரது நண்பர்களான லோகேஸ்வரன் மற்றும் ராம மூர்த்தியை பிடித்து விசாரித்தனர். அப்போது, மதுபோதையில் விளையாட்டாக நினைத்து செய்தது கொலையில் முடிந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, லோகேஸ்வரன், ராம மூர்த்தியை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை