ஆள் நடமாட்டம் இல்லாத மலையடிவாரம்.. 45 வயது கள்ளக்காதலியை 65 வயது கள்ளக்காதலன் என்ன செய்தார் தெரியுமா?

By vinoth kumar  |  First Published May 11, 2023, 2:38 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரது மனைவி செல்வி (45). இவர் கால்நடைகளுக்கு தேவையான புற்களை அறுத்து கொடுக்கும் வேலையை செய்து வந்துள்ளார். 


தேனி அருகே மலை அடிவாரத்தில் பெண் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரது மனைவி செல்வி (45). இவர் கால்நடைகளுக்கு தேவையான புற்களை அறுத்து கொடுக்கும் வேலையை செய்து வந்துள்ளார். வழக்கம் போல புற்களை அறுக்க வடபுதுப்பட்டி அழகர்கோயில் கரடு பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், பதறிப்போன குடும்பத்தினர் அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, செல்வியை போலீசார் தேடி வந்த நிலையில் புல் அறுக்க சென்ற மலைஅடிவாரத்தில் தலையில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அண்ணியை கரெக்ட் செய்ய நினைத்த கொழுந்தன்.. விஷயம் தெரிந்த அண்ணன்.. இறுதியில் நடந்த பயங்கரம்..!

இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 


 முதற் கட்ட விசாரணையில் அந்த பெண் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனிடையே, செல்விக்கும் சருத்துப்பட்டியை சேர்ந்த இருளப்பன்(60) என்பவருக்கும் 4 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இருளப்பனிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில் தனக்கு காசநோய் இருப்பதால் தன்னுடன் செல்வி பேச மறுத்ததால் கட்டையால் அடித்து அவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இதையும் படிங்க;-  உல்லாசத்தின் போது ஓயாமல் அழுத குழந்தை! ஆத்திரத்தில் 4வது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாய் என்ன செய்தார் தெரியுமா?

click me!