வரதட்சணை கேட்டு தினம் தினம் செக்ஸ் டார்ச்சர்... கணவர் மீது மனைவி போலீசில் புகார்

By SG Balan  |  First Published May 9, 2023, 11:45 AM IST

கூடுதல் வரதட்சணை கொடுக்காததால் இயற்கைக்கு முரணான பாலியல் உறவுகளில் ஈடுபட்டு கொடுமைப்படுத்திய கணவர் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார்.


குவாலியரில் ஒரு இளம்பெண் தனது கணவர் ரூ.10 லட்சம் பணமும் காரும் கேட்டு, அவை கிடைக்காத கோபத்தில் தன்னுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டதாக காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளார்.

கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அந்தப் பெண் குற்றம் சாட்டுகிறார். பெண்ணின் பெற்றோர் கணவருக்கு பலமுறை அறிவுரை கூறித் திருத்த முயற்சித்தும், அவர் புரிந்துகொள்ளவில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் கோஞ்ச் ஜலான் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

Latest Videos

பாதிக்கப்பட்ட பெண் இறுதியில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் குவாலியர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது இயற்கைக்கு மாறான பாலியல் பலாத்காரம் மற்றும் வரதட்சணை கொடுமை வழக்கு சனிக்கிழமை பதிவு செய்யப்பட்டது.

நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு பியூட்டி பார்லர் கேக்குதா டி? வான்ட்டடாக வம்பு இழுத்து தாக்குதல்! வைரல் வீடியோ.!

பாதிக்கப்பட்ட 24 வயது இளம்பெண் உத்தரப் பிரதேசத்தில் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது, வரதட்சணையாக, தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் இதர பொருட்களுடன், 15 லட்சம் ரூபாயை பெண்ணின் குடும்பத்தினர் தரப்பில் கொடுத்துள்ளனர். இருப்பினும், கூடுதலாக ரூ.10 லட்சம் மற்றும் ஒரு கார் வேண்டும் என கணவரும் மாமியாரும் கேட்க ஆரம்பித்ததால் பிரச்சனை தொடங்கியது.

பாதிக்கப்பட்ட பெண் இந்தக் கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்ததால், அவரது கணவர் அவருடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பெண், தான் தனியாக இருக்கும் போதெல்லாம் மாமனார் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அவருடைய கணவரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் நிலைமைக்கு அவரையே குற்றம் சாட்டினார்கள்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

உல்லாசத்தின் போது ஓயாமல் அழுத குழந்தை! ஆத்திரத்தில் 4வது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாய் என்ன செய்தார் தெரியுமா?

click me!