போன் பண்ணாலும் எடுக்கல.. வீட்டுக்கு வரல.. கள்ளக்காதலன் வீட்டிற்கே சென்ற நிஷா.. அப்புறம் நடந்த தரமான சம்பவம்.!

Published : Jul 04, 2021, 05:28 PM IST
போன் பண்ணாலும் எடுக்கல.. வீட்டுக்கு வரல.. கள்ளக்காதலன் வீட்டிற்கே சென்ற நிஷா.. அப்புறம் நடந்த தரமான சம்பவம்.!

சுருக்கம்

கடந்த 2 நாட்களாக செல்வராஜ், நிஷா வீட்டிற்கு வரவில்லை. செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இதையடுத்து கள்ளக்காதலனை தேடி நிஷா செல்வராஜ் வீட்டிற்கே சென்றார். அப்போது தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். இதனால் செல்வராஜ் மனைவி ஞானசுந்தரிக்கும், நிஷாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. 

கணவனின் கள்ளக்காதலியை மனைவி மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம், கொழுமம் ருத்ராபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஞானசுந்தரி (32).  இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இந்நிலையில். செல்வராஜ் வேலைக்கு சென்ற இடத்தில் நிஷா (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

நிஷா கணவனை பிரிந்து தனியாக வசிப்பதால் செல்வராஜ் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். சில நேரங்களில் அங்கேயே தங்கியும் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களாக செல்வராஜ், நிஷா வீட்டிற்கு வரவில்லை. செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இதையடுத்து கள்ளக்காதலனை தேடி நிஷா செல்வராஜ் வீட்டிற்கே சென்றார். அப்போது தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். இதனால் செல்வராஜ் மனைவி ஞானசுந்தரிக்கும், நிஷாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. 

இதில், ஆத்திரமடைந்த ஞானசுந்தரி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து நிஷா மீது ஊற்றி தீ வைத்துவிட்டார். நிஷா உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து உடலில் பற்றிய தீயை அணைத்தனர். இதனையடுத்து, உடனே ஆம்புலன்ஸ் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசுந்தரி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி