அடச்சீ கருமம் கருமம்.. பெற்ற மகளை 2 வருடங்களாக மிரட்டி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய காமக்கொடூர தந்தை..!

Published : Jul 02, 2021, 03:56 PM ISTUpdated : Jul 02, 2021, 04:12 PM IST
அடச்சீ கருமம் கருமம்.. பெற்ற மகளை 2 வருடங்களாக மிரட்டி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய காமக்கொடூர தந்தை..!

சுருக்கம்

பெற்ற மகளை 2 வருடங்களாக மிரட்டி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய காம கொடூர தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

பெற்ற மகளை 2 வருடங்களாக மிரட்டி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய காம கொடூர தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, சோழிங்கநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறாள். அந்த சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதைகேட்ட, தாய் அதிர்ச்சியடைந்தார். உடனே இது தொடர்பாக கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில், தனது கர்ப்பத்திற்கு காரணம் தந்தை வர்க்கீஸ்(54) எனவும், கடந்த 2 வருடங்களாக வீட்டில் தாள் இல்லாத நேரத்தில்  தன்னிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டிதாக  கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சிறுமியின் தந்தை வர்கீஸை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மகளையே தந்தை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!
திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு