வாடகைக்கு வந்த இளைஞனுடன் கள்ளக் காதல்.. காதலை எதிர்த்த மகனை அடித்து கொன்ற தாய்..

Published : May 27, 2022, 07:31 PM ISTUpdated : May 27, 2022, 07:34 PM IST
 வாடகைக்கு வந்த இளைஞனுடன் கள்ளக் காதல்.. காதலை எதிர்த்த மகனை அடித்து கொன்ற தாய்..

சுருக்கம்

தன் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த மகனையே தாய் கூலிப்படை வைத்து அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநில தலைநகர் பாட்னாவில் இந்த கொடூரம் நடந்துள்ளது.  

தன் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த மகனையே தாய் கூலிப்படை வைத்து அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநில தலைநகர் பாட்னாவில் இந்த கொடூரம் நடந்துள்ளது.

சமீப காலமாக கொலை, தற்கொலை என பெரும்பாலன குற்றங்கள் கள்ளக் காதலை மையமாக வைத்தே அரங்கேறி வருகிறது. திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபடுவோர் அதை தக்க வைத்துக் கொள்ள அதை எதிர்ப்பவர் எவராக இருந்தாலும் அவர்களை தீர்த்துக் கட்டும் அளவிற்கு துணியும் கொடூரம் அரங்கேறி வருகிறது.  இந்த வரிசையில் கள்ளக்காதலுக்காக மகனையே தாய் கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் திதர்கஞ்ச், தர்ம்ஷாலாகாலியை சேர்ந்தவர்  ஜூலி தேவி, இவர் சூரஜ் என்ற 19 வயது மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர்களது வீட்டில் தர்மேந்திர குமார் என்ற இளைஞர் வாடகைக்கு குடியேறினார். கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் ஜூலி தேவியின் மீது தர்மேந்திர குமாருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

இருவரும் நெருக்கமாக பழகினர். அது கள்ளக்காதலாக மாறியது, மகன் சூரஜ் வீட்டில் இல்லாத போது தனிமையில் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்தனர். தனது தாயின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை அறிந்த சூரஜ் தாயின் நடவடிக்கைகளை கண்காணித்தார். வாடகைக்கு வந்துள்ள தர்மேந்திர குமாருடன் அவர் தவறான உறவில் ஈடுபட்டு வருவது அறிந்து அதிர்ச்சி அடைந்தார் சுவராஜ், இதனால் தனது தாயை கண்டித்தார், தர்மேந்திர குமாரிடம் இருந்து விலக வேண்டும் என வற்புறுத்தினார். ஆனால் ஜூலி தேவி  அதைப் பொருட்படுத்தவில்லை, இந்நிலையில் தர்மேந்திர குமாருடன் சூரஜ் குமாருக்கு மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து கோபித்துக்கொண்டு தனது பாட்டி வீட்டுக்கு சென்றார் சுராஜ், பின்னர் மே 22 ஆம் தேதி இரவு அவர் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த நிலையில், தர்மேந்திர குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சூரஜ் அடித்துக் கொலை செய்தனர்.

பின்னர் சூரஜின் உடலை ரயில் தண்டவாளத்தில் வீசினர், கொலையில் இருந்து தப்பிக்க சூரஜின் தலையை குழி தோண்டி புதைத்தனர். அடுத்த நாள் மே 23 அன்று ரயில் பாதையின் ஓரத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர், அதில் தாய் ஜூலி தேவியின் மீது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரை பிடித்து விசாரித்ததில் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த நிலையில் தனது மகன் தன் கள்ளக் காதலுக்கு எதிராக இருந்த நிலையில் தனது கள்ளக்காதலன் தனது மகனை அடித்துக் கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் ஜூலி தேவியின் கள்ளக்காதலன் தர்மேந்திர குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். 
 

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!