கல்யாணம், முதலிரவு, 8 வது நாளில் பணம் நகையுடன் எஸ்கேப் ... 15 ஆண்கள் வாழ்க்கையில் விளையாடிய வில்லி.

By Ezhilarasan BabuFirst Published May 27, 2022, 7:09 PM IST
Highlights

இளைஞரை திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர்  ஒரே வாரத்தில் நகை மற்றும் பணத்துடன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில், இதுவரை 15 பேரை திருமணம் செய்து  பணம் நகைகளை கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது.

இளைஞரை திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர்  ஒரே வாரத்தில் நகை மற்றும் பணத்துடன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில், இதுவரை 15 பேரை திருமணம் செய்து  பணம் நகைகளை கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது.

பல இளைஞர்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தனது இளமைக் காலத்தை தனிமையில் கழிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிலும் ராஜஸ்தான் மத்திய பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். கிடைக்கும் பெண்களை திருமணம் செய்து கொள்ள நிலையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் போபாலில் இதை சாதகமாக வைத்து மோசடி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. போபாலில் சேர்ந்த காந்தா பிரசாத் நாத் திருமணம் செய்துகொள்ள ஒரு நல்ல பெண் வேண்டும் என எதிர்பார்த்து இருந்தார். அப்போது திடீரென்று தினேஷ் என்பவர் தனக்கு திருமணம் ஆகாத பூஜா என்ற உறவுக்கார பெண் இருக்கிறார் என காந்தா பிரசாத் நாத்திடம் கூறினார். இந்நிலையில் தினேஷின் ஏற்பாட்டின் பேரில் பூஜா உடன் காந்தா பிரசாத் நாத் திருமணம் செய்து கொண்டார் அவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்தது. ஆனால் திருமணம் முடிந்த 8 நாட்கள் ஆன நிலையில் பூஜா தனது உறவினர் தினேஷ் மனைவிக்கு போன் செய்து தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார். இந்நிலையில் தனது வீட்டுக்கு வருமாறு அந்தப்பெண் அழைத்தார்.

அதை உண்மை என்று நம்பிய காந்தா பிரசாத் நாத் தன் மனைவியை அனுப்பி வைத்தார். ஆனால் வீட்டை விட்டு வெளியேறிய பூஜா அதன் பிறகு கணவர் காந்தா பிரசாத் நாத்தை தொடர்பு கொள்ளவில்லை, அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது, இதனையடுத்து தினேசை தொடர்பு கொண்டார் ஆனால் தினேஷின் போனும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. ஏதோ தவறு நடக்கிறது என அதிர்ச்சி அடைந்த காந்தா பிரசாத் நாத் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். வீட்டில் இருந்த தங்கம் மற்றும் பணத்தை அந்த பெண் எடுத்துச் சென்றது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் பூஜா குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் போபாலில் அந்தப்  பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் சீமா கான் என்பது தெரியவந்தது. அந்த பெண் இதுவரை 15 பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்த நகை பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து மோசடி செய்தது தெரியவந்தது. ரியா, ரெனி, சுல்லானா என்ற பெயர்களில் அவர் வலம் வந்திருக்கிறார். ஒவ்வொரு திருமண மோசடி க்கும் தினேஷ் தனக்கு 35 லட்சம் ரூபாய் தருவதாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்தார். இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் திருமண மோசடி செய்யும் அவர்களது கும்பலை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!