வீட்டை விட்டு வெளியேறி 60 வயது கிழவன் உடன் 34 வயது பெண் உல்லாசம்.. மனைவியின் கள்ளக்காதலால் கணவர் வெறிச்செயல்

Published : Jun 04, 2020, 11:57 AM IST
வீட்டை விட்டு வெளியேறி 60 வயது கிழவன் உடன் 34 வயது பெண் உல்லாசம்.. மனைவியின் கள்ளக்காதலால் கணவர் வெறிச்செயல்

சுருக்கம்

சென்னையில் கள்ளக்காதலுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த மனைவியை உயிருடன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு கணவரை கைது செய்துள்ளனர். 

சென்னையில் கள்ளக்காதலுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த மனைவியை உயிருடன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு கணவரை கைது செய்துள்ளனர். 

சென்னை எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் அன்பானந்தம் 3வது தெருவை சேர்ந்தவர் செந்தில்வேல்முருகன் (38). கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (34). இவர்களுக்கு 13 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், லட்சுமி வீட்டின் அருகே செக்யூரிட்டி வேலை செய்யும் கோவிந்தசாமி(62) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் லட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கணவர் இல்லாத சமயத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இவர்கள் கள்ளக்காதல் விவகாரம் காலபோக்கில் கணவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, மனைவியின் கள்ளக்காதலை பல முறை கண்டித்தும் அவர் கள்ளத்தொடர்பை விடவில்லை. இதனால், கணவன், மனைவிக்கும் இடையே  அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், கோபமடைந்த மனைவி வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்காதலன் கோவிந்தசாமி வீட்டிற்கு  சென்றுவிட்டார். 

இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில் வேல்முருகன் தனது மனைவி லட்சுமியை சேர்ந்து வாழ கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று பல முறை அழைத்துள்ளார். ஆனால் லட்சுமி, நான் கோவிந்தசாமியுடன்தான் வாழ்வேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். மீண்டும் போய் செந்தில்வேல் முருகன் தனது மனைவியை குடும்பம் நடத்த வரும்படி கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று அழைத்தார். அப்போது லட்சுமி மற்றும் கள்ளக்காதலன் கோவிந்தசாமி ஆகியோர் செந்தில் வேல்முருகனை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.  இதனால், கடும் ஆத்திரமடைந்த செந்தில்வேல்முருகன் இருவரையும் கொலை செய்ய முடிவு செய்தார். 

 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி கொண்டு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். லட்சுமி கதவை திறந்ததும் செந்தில்வேல் முருகன் கையில் கொண்டு வந்த பெட்ரோலை மனைவி லட்சுமி மற்றும் கள்ளக்காதலன் கோவிந்தசாமி மீது ஊற்றி மின்னல் வேகத்தில் தீ வைத்து கொளுத்தினார்.  

இதை சற்றும் எதிர்பார்க்காத லட்சுமி மற்றும் கோவிந்தசாமி உடல் முழுவதும் தீ பிடித்து அறையில் அங்கும் இங்கும் ஓடி அலறி துடித்தனர்.  அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த லட்சுமி நேற்று மாலை உயிரிழந்தார். அவரது கள்ளக்காதலன் கோவிந்தசாமி 60 சதவீதம் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் வேல்முருகனை கைது செய்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!