விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து....ஒருவர் பலி.!!

Published : Jun 03, 2020, 08:50 PM IST
விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து....ஒருவர் பலி.!!

சுருக்கம்

விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 ஓ.கோவில்பட்டி கிராமத்தில் ராஜ்குமார் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் சான்றிதழ் பெற்ற இந்த ஆலையில் பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில்இன்று 25 தொழிலாளர்கள் பட்டாசு ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதில் பெரியமருளூத்து கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் மல்லீஸ்வரர் என்பவர் மணி மருந்து கலவையில் ஈடுபட்டபோது உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. அதில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் மூன்று அறைகள் சேதமடைந்தன. இதுகுறித்து ஆமத்தூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகிறது.

PREV
click me!

Recommended Stories

கல்யாணம் பண்ணாலும் உன்னை என்னால் மறக்க முடியல.. லாட்ஜில் ரூம் போட்ட ஜோடிகள்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி
உடற்கல்வி ஆசிரியருடன் சௌமியா.! வீட்டிற்கு வந்தும் எந்நேரமும் ஓயாமல்! விஷயம் தெரிந்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!