பெற்ற மகளிடம் உல்லாசம் தேடிய தந்தை... கர்ப்பமாக்கி கைதான கயவன்..!

Published : Jun 01, 2020, 03:56 PM IST
பெற்ற மகளிடம் உல்லாசம் தேடிய தந்தை... கர்ப்பமாக்கி கைதான கயவன்..!

சுருக்கம்

மயிலாடுதுறை அருகே 9ம் வகுப்பு படிக்கும் மகளை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.  

மயிலாடுதுறை அருகே 9ம் வகுப்பு படிக்கும் மகளை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார்கோவில் அருகே ஆக்கூரை சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. உடனடியாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

மருத்துவமனைக்கு வந்து போலீசார் விசாரணை செய்ததில் சிறுமியின் தந்தை மகளிடம் தகாத உறவில் ஈடுபட்டு கர்ப்பம் ஆக்கியது தெரியவந்தது. உடனடியாக சிறுமியிடம் புகாரை பெற்ற இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி தலைமையிலான அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டமான குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். சிறுமி தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

PREV
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!