எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்... ஆத்திரத்தில் கணவர் செய்த காரியம்..!

Published : Aug 11, 2021, 02:19 PM IST
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்... ஆத்திரத்தில் கணவர் செய்த காரியம்..!

சுருக்கம்

 லோகேஸ்வரிக்கு ராஜ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.  அடிக்கடி தனிமையில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை அரிவாள் வெட்டிவிட்டு கள்ளக்காதலனை படுகொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர். 

சென்னை செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் விஷ்ணு நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(37). இவர் செங்குன்றம் அடுத்த அலமாதி எடப்பாளையம் பஜாரில் வெல்டிங் கடை நடத்தி வந்தார். இந்த வெல்டிங் கடையில் பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்த லோகேஸ்வரி(37) பணியாற்றி வந்தார். இந்நிலையில் லோகேஸ்வரிக்கு ராஜ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.  அடிக்கடி தனிமையில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் நாளடைவில் கணவர் லட்சுமணனுக்கு தெரியவந்ததையடுத்து மனைவியை கண்டித்தார். வேலைக்கு செல்ல வேண்டாம் எனவும் கண்டித்துள்ளார். ஆனால், கணவரின் பேச்சை மீறி லோகேஸ்வரி தொடர்ந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கணவர் வெல்டிங் கடைக்கு சென்று அங்கிருந்த ராஜ்குமாரை கத்தியால் சரமாரியாக வெட்டியதுடன், அவரது மனைவியையும் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டார். 

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ராஜ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயமடைந்த லோகேஸ்வரி மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான லட்சுமணனை தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தனியாக செல்லும் பொண்ணுங்க தான் டார்கெட்.. தொடக்கூடாத இடத்தில் தொட்டு சிக்கிய 27 வயது இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி
சார் நீங்களும் டீச்சரும்.. செல்போனில் பலான வேலை பார்த்த போட்டோ என்கிட்ட இருக்கு! ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய மாணவர்கள்