வீட்டு வேலைகாரியுடன் அடிக்கடி உல்லாசம்.. பிரபல நகைக்கடை அதிபரின் காமவெறி.. பெண் போலீசில் கதறல் .

Published : Aug 10, 2021, 08:13 AM IST
வீட்டு வேலைகாரியுடன் அடிக்கடி உல்லாசம்.. பிரபல நகைக்கடை அதிபரின் காமவெறி..  பெண் போலீசில் கதறல் .

சுருக்கம்

அதன் பின்னர் அந்த பணத்தில் கிட்டத்தட்ட 15 சவரன் தங்க நகைகளை வாங்கி, அதனையும் பாதுகாப்பு கருதி, நம்பிக்கையின் அடிப்படையில் உரிமையாளரான சுப்பையாவிடம் கொடுத்து வைத்துள்ளார். 

சென்னையில் வீட்டு வேலை செய்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து வந்ததுடன், அவர் உழைத்து வாங்கிய 15 சவரன் தங்க நகைகளை கொடுக்காமல் அலைகழித்து வரும் வைர வியாபாரி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் வசந்தி (45). இவர் சென்னை உஸ்மான் சாலையில் இயங்கி வரும் ஒரு வைர நகைக்கடை உரிமையாளர் சுப்பையா (72) என்பவர் வீட்டில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார். கணவனை இழந்த வசந்தி தான் வீட்டு வேலை செய்து  சம்பாதித்த பணம் அனைத்தையும் வீட்டின் உரிமையாளர் சுப்பையாவிடம் பணமாகக் கொடுத்து வைத்ததாக தெரிகிறது. 

அதன் பின்னர் அந்த பணத்தில் கிட்டத்தட்ட 15 சவரன் தங்க நகைகளை வாங்கி, அதனையும் பாதுகாப்பு கருதி, நம்பிக்கையின் அடிப்படையில் உரிமையாளரான சுப்பையாவிடம் கொடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உடல்நிலை பாதிக்கப்பட்ட வசந்தி ஊருக்கு சென்று மீண்டும் திரும்பியுள்ளார். பின்பு தான் வீட்டு வேலைகளை விட்டுவிட்டு ஊருக்கு செல்ல விரும்புவதாகக் கூறிய அவர், தான் கொடுத்து வைத்திருந்த 15 சவரன் தங்க நகையை தருமாறு சுப்பையாவிடம் கேட்டுள்ளார். அதற்கு சுப்பையா மறுத்ததாகவும், இன்னும் 15 வருடங்கள்  தன்னிடம் வீட்டு வேலை செய்தால்தான் நகைகளை திருப்பி அளிப்பேன் என வசந்தியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இது தொடர்பாக வசந்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது நகைகளை மீட்டுத்தர வேண்டுகோள் விடுத்தார். மேலும், 72 வயது முதியவரான சுப்பையா தன்னிடம் பலமுறை உடலுறவு கொண்டதாகவும், அதன் காரணமாகவே தான் உடல்நிலை பாதிக்கப்பட்டு தன்னுடைய கர்ப்பப்பையை நீக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற அவர், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டியே காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

தனியாக செல்லும் பொண்ணுங்க தான் டார்கெட்.. தொடக்கூடாத இடத்தில் தொட்டு சிக்கிய 27 வயது இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி
சார் நீங்களும் டீச்சரும்.. செல்போனில் பலான வேலை பார்த்த போட்டோ என்கிட்ட இருக்கு! ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய மாணவர்கள்