
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்த கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரும்பாலான கொலை, தற்கொலைகள் சம்பவங்கள் கள்ளக்காதலை மையமாக வைத்து அரங்கேறி வருகிறது. சபலத்தால் கள்ளக்காதலில் சிக்குபவர்கள் சுயநலத்திற்காக கும்பத்தின் கவுரவம், குழந்தைகளின் எதிர்காலம் என அனைத்தையும் காற்றில் பறக்கவிடும் அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அந்தக் கள்ளக் காதல் கைகூடி வரவில்லை என்றால், அவர்கள் கொலை அல்லது தற்கொலை செய்யவும் துணிகின்றனர். இப்படி ஒரு சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள எருக்காலம் பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (47) கூலி வேலை செய்து வந்தார்.
இவருக்கு ஒரு மனைவி ஒரு மகள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டது. இதே பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மனைவி மாரியம்மாள் (40) கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நடராஜன் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் மாரியம்மாள் உடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அது கள்ளக்காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர், இந்த விவகாரம் உறவினர்களுக்கு தெரிந்து தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து மாரியம்மாளம் மணிகண்டனும் ஊரைவிட்டு மாயமாகினர். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.
இந்நிலையில் நேற்று காலை குண்டடம் அருகே பொம்ம நாயக்கன் பட்டி அருகே உள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அருகே இருவரும் சடலமாக கிடந்தனர் அருகே காலி மது பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர் விஷ பாட்டில் ஆகியவை கிடந்தன, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 2 பேரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமனை அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தினர் தங்களை பிரித்து விடுவார்களோ என அஞ்சிய கள்ளக்காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.