அண்ணன் வெளிநாட்டுக்கு சென்ற கேப்பில் அண்ணியை கரெக்ட் செய்த கொழுந்தன்.. ஏற்காட்டு ரூமில் நடந்த ஏடாகுடம்.!

By vinoth kumar  |  First Published Jan 7, 2022, 8:12 AM IST

தனிமையில் இருந்த அண்ணி மஞ்சுவுக்கும் விஜய்க்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.அண்ணன் பிரபு வெளிநாட்டில் இருந்ததால் இருவருக்கும் ரொம்பவே வசதியாக போய்விட்டது.  அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 


கணவரின் தம்பியுடன் கள்ளத்தொடரபில் இருந்து வந்த அண்ணி, அவருக்கு திருமணம் முடிவானதால் ரூம் போட்டு உல்லாசமாக இருந்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன்.  இவர்களுக்கு 2 மகன்கள்.  பிரபுவுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பி விஜய்க்கு (30) இன்னும் திருமணமாகவில்லை. அனைவரும் ஒரே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்.  குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2017 ம் ஆண்டு பிரபு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று இருக்கிறார்.  அப்போது, தனிமையில் இருந்த அண்ணி மஞ்சுவுக்கும் விஜய்க்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அண்ணன் பிரபு வெளிநாட்டில் இருந்ததால் இருவருக்கும் ரொம்பவே வசதியாக போய்விட்டது.  அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், வெளிநாடு சென்றிருந்த பிரபு திரும்பி வந்ததும் மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனிக்குடித்தனம் சென்றுவிட்டு விவசாயம் செய்து வந்தார். இதனால் மஞ்சுவும் விஜய்யும் உல்லாசம் அனுபவிக்க முடியாமல் போனது. ஆனால், இருவரும் செல்போனில் பேசிக்கொண்டு வந்தனர். பின்னர், இருவரும் ஏற்காடுக்கு சென்றிருந்தனர். 

அங்கே ரூம் எடுத்து இருவரும் உல்லாசம் அனுபவித்துள்ளார்கள்.  அதன்பிறகு கொழுந்தன் விஜய் தனக்கு திருமணமாக இருக்கும் தகவலை சொல்லியிருக்கிறார்.  இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.  நீ திருமணம் செய்து கொண்டால் நான் உன்னோடு எப்படி உல்லாசமாக இருக்க முடியாது என்பதால் மஞ்சு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வேறு வழி இல்லை நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக சொல்லி இருக்கிறார். இதன் பின்னர் இருவரும் தூங்கி விட்டனர்.

திடீரென அதிகாலை எழுந்து பார்த்தபோது  பக்கத்தில் படுத்திருந்த அண்ணியை காணவில்லை என்பதால் அதிர்ந்துபோனார். அப்போது பாத்ரூமிலிருந்து தண்ணீர் சத்தம் கேட்டதால் அவர் பாத்ரூம் போய் இருக்கிறார் என்று நினைத்து விஜய் தூங்கியிருக்கிறார்.   பின்னர் மீண்டும் நீண்ட நேரமாகியும் பாத்ரூம் கதவு திறக்காததால் அதிர்ச்சி அடைந்த அவர் பாத்ரூம் கதவை தட்டியுள்ளார். இதனையடுத்து, உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது நிர்வாண கோலத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்திருந்தார். 

இதனால், அதிர்ந்து போன அவர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மஞ்சு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் செய்து கொள்ள அண்ணி எதிர்ப்பு தெரிவித்ததால் அண்ணி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

click me!