போலீஸ் விசாரணையின் போது சாமியாட்டம்... தில்லாலங்கடி பெண் சாமியார் காளிமாதாவின் லீலைகள்..!

By Thiraviaraj RMFirst Published Jan 6, 2022, 11:03 AM IST
Highlights

சாமியார்கள் செய்யும் அட்ராசிட்டி கொஞ்சம் அதிகமாகவே இருந்து வருகிறது. அருள் வாக்கு அன்னபூரணி விவகாரம் முடிவதற்குள் இன்னொரு பெண் சாமியாரின் மோசடி விவகாரம் கிளம்பி இருக்கிறது.
 

சாமியார்கள் செய்யும் அட்ராசிட்டி கொஞ்சம் அதிகமாகவே இருந்து வருகிறது. அருள் வாக்கு அன்னபூரணி விவகாரம் முடிவதற்குள் இன்னொரு பெண் சாமியாரின் மோசடி விவகாரம் கிளம்பி இருக்கிறது.

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சாமியார் காளி மாதா  போலீஸ் விசாரணையின் போது சாமியாட்டம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த பீலி நாயக்கன்பட்டி கிராமத்தில் தவயோகி என்பவர் ஆசிரமம் நடத்தி வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக இந்த ஆசிரமத்தில் திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த திருட்டை கண்டுபிடிக்க உதவி செய்வதாக கூறி திண்டுக்கல்லைச் சேர்ந்த பவிதா வேளாங்கண்ணி என்ற 45 வயது பெண் வந்திருக்கிறார். அவர் தன்னை சிபிஐ அதிகாரி எனக்கூறி தவயோகி சாமியாருக்கு அறிமுகமாகியிருக்கிறார்.

பின்னர் பெண் சாமியாரான பவிதாவுக்கு சொந்தமாக ஆத்தூர் சித்தரேவு பகுதியில் ஒரு இடம் இருப்பதாகவும் அந்த இடத்தில் முதியோர் இல்லம் நடத்தலாம் என்றும் கூறி தவயோகியிடம் இருந்து 11 லட்சம் ரூபாயை வாங்கி இருக்கிறார். வங்கியின் மூலமாக 5.5 லட்சம் அவருக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது. கொடைக்கானலில் ஒரு இடம் இருப்பதாகவும் அந்த இடத்தில் ஆசிரமம் கட்டலாம் என்றும் சொல்லி பணம் கேட்டதாகவும் தெரிகிறது. 

அது மட்டும் இல்லாமல் தவயோகி தனது ஆசிரமத்தில் இல்லாத நேரத்தில் அங்கு இருக்கும் சுந்தரேசன் உதவியோடு 35 பவுன் நகைகள் சொத்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.  இந்த நேரத்தில் ஆசிரமத்தில் புலித்தோல் இருப்பதாக  போலீசார் பவிதா புகார் கொடுத்திருக்கிறார்.

போலீசாரின் விசாரணையில் தவயோகி தலைமறைவாகிவிட்டார். ஏற்கனவே தவயோகியிடம் பெற்றிருந்த பவர் ஆப் அட்டர்னி உரிமையின் அடிப்படையில் ஆசிரமத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார் பவிதா. இது தெரிந்து பவர் ஆப் அட்டார்னி அதிகாரத்தை ரத்து செய்து, போலீசில் புகார் அளித்திருக்கிறார் தவயோகி. 35 பவுன் நகை நிலம் வாங்கித் தருவதாகச் சொல்லி வாங்கப்பட்ட 11 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்ததாக புகார் கூறியிருக்கிறார். 

 புகாரின் அடிப்படையில் நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வழக்குகளில் கீழ் பெண் சாமியார் பவிதா என்கிற காளிமாதாவை தேடி வந்தனர்.  இந்த நிலையில் திண்டுக்கல் மேற்கு ஆரோக்கிய மாதா தெருவில் வசித்துவரும் அவருடைய வீட்டில் பதுங்கியிருந்த காளி மாதாவையும்  அவரின் உதவியாளரான இருவரையும் கைது செய்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

போலீசாரின் விசாரணையில் சிபிஐ அதிகாரி என்று பல இடங்களில் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் மேலும் தன்னை காளியின் மறு உருவம் என்றும் விசாரணையின்போது அவர் சாமி ஆடியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

‘தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள கரம்பயம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் பவித்ரா. சின்னவயதிலேயே அவரது அப்பா திண்டுக்கல் போயிட்டார். அங்கே தான் எம்.ஜி.ஆர் இவருக்கு பவித்ரானு பெயர் வச்சார். வீட்டுக்கு பக்கத்திலேயே காளி கோயில் என்பதால் காளி மீதான பக்தி அதிகமாகிடுச்சு. பின்னாளில் ஜெ. முதல்வராக இருந்தப்ப அவங்களை பார்க்கப் போன பவித்ராவை பார்த்து தங்கத் தாரகைனு அழைத்ததாக பவித்ரா முன்னதாக ஒரு பேட்டியிலேயே சொல்லி இருக்காங்க.

காளிமாதாகிட்ட ஆசியும் ஒரு ரூபாய் காசும் வாங்கினதால தான் ஓ.பி.எஸ். முதல்வர் ஆனார் என்றும், எடப்பாடி தன்னை வரவேற்கவில்லை என்பதால் ஆட்சி இழந்தார் என்றும் கூட சொல்லி இருக்காங்க. எடியூரப்பா தொடங்கி திண்டுக்கல் சீனிவாசன் வரை காளிமாதாவோட பக்தர்கள் தான்’ என்றனர். 

 

click me!