ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் அவ்ளோ ஆபசமாக பேசுனாங்க.. எங்களால் தாங்கவே முடியல..கண்ணீர் விட்ட தம்பதியினர்

By Thanalakshmi VFirst Published Jan 5, 2022, 10:18 PM IST
Highlights

ரொம்ப அசிங்கமாக வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு பேசியாதாகவும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் ரவுடி பேபி சூர்யா,சிக்கந்தர் மீது புகார் கொடுத்த தம்பதியினர் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்துள்ளனர்.
 

பெண்கள் குறித்து யூடியூப் சேனலில் அவதூறு கருத்துப் பதிவிட்ட, டிக் டாக் பிரபலம் ‘ரவுடி பேபி’ சூர்யா, அவரது நண்பர் சிக்கந்தர்ஷா ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மதுரையைச் சேர்ந்தவர் சூர்யா (35). டிக் டாக் செயலியில், ‘ரவுடி பேபி’ சூர்யா என்ற பெயரில் இயங்கி வந்த இவர், தினமும் அதில் பல வீடியோக்களைப் பதிவிட்டு வந்தார். இவரது நண்பர் மதுரையைச் சேர்ந்த சிக்கா என்ற சிக்கந்தர்ஷா. இவர்கள் இருவரும் டிக் டாக்கில் ஆபாசமான முறையில் வீடியோக்களைப் பதிவிடுவதாக புகார்கள் எழுந்தன. டிக் டாக் தடை செய்யப்பட்ட பின்னர், இருவரும் யூடியூப் சேனலைத் தொடங்கி நடத்தி வந்தனர். இவர்கள் மீது கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தம்பதியினர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தனர். அதன் பேரில்,  8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த தனிப்படை போலீஸார், மதுரையில் இருந்த சூர்யா, சிக்கந்தர்ஷா ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து, கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் இதுக்குறித்து புகார் கொடுத்த தம்பதியினர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளனர். அவர்கள் பேசியதாவது, ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் இருவரும் லைவ் வீடியோ பண்ணும் போது அவர்களது வீடியோவிற்கு வரும் ஆபாசமான கமெண்டுகளுக்கு மட்டும் பதில் சொல்வார்கள். வெறும் பார்வையாளர்களை கவர வேண்டும் என்றும் பணம் சம்பாதிப்பதற்கும் மட்டுமே ஆபாசமாக, இழிவாக பேசி இருவரும் தொடர்ந்து பல வீடியோக்கள் போடுவதாக குற்றச்சாட்டினர்.மேலும் இவர்களது இந்த மாதிரி ஆபாச வீடியோக்களினால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி உருக்கமாக பேசிய ஆடியோ ஒன்று எங்களுக்கு அனுப்பினார். அதனை எங்களது யூடியூப் பக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாங்கள் போட்டோம். அன்றில் இருந்து தான் எங்களுக்கு பிரச்சனை வர தொடங்கியது என்று அந்த தம்பதியினர் தெரிவிக்கின்றனர். 

மேலும் எங்களுடைய மொபைல் எண்ணையை சில அப்களில் போட்டு விட்டு என்னுடன் வீடியோ கால் பேச வேண்டும் என்றால் இந்த எண்ணிற்கு அழைக்கவும் என்றெல்லாம் ரவடி பேபி சூர்யா செய்ததாகவும் கூறும் அவர்கள், இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சல் ஆனதாகவும் கூறுகின்றனர். மேலும் எங்கிட்ட மன்னிப்பு கேட்காவிட்டால் உன் போட்டோவை உன் மனைவி போட்டோவை மார்பிங் செய்து இணையத்தில் போட்டு விடுவேன் என்று மிரட்டியதாக கூறுகின்றனர். மேலும் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு ரொம்ப ஆபாசமாக கெட்ட வார்த்தைகளால் பேசியதாக கண்ணீர் மல்க அந்த பேட்டியில் கூறினர். என் மனைவியை வேறு ஆண்களுடன் தொடர்பு படுத்தியும் எங்கள் குழந்தையை வேறு யாருக்கோ பெற்றெடுத்ததாகவும் தொடர்ந்து பொய்யான தகவல்களை பேசி ரவுடி பேபியும் , சிக்கந்தரும் வீடியாக வெளியிட்டு வந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

மனைவியை வார்த்தைக்கு வார்த்தை மலடி மலடி என்று பல வீடியோக்களில் பேசி வருவதாக கூறும் போது அந்த தம்பதியினர் அழுதே விட்டனர். மேலும் அவர்களது குழந்தை புகைபடத்தை எடுத்து வைத்துக்கொண்டு மார்பிங் செய்து உன் குழந்தையை ஒருத்தனுக்கு விற்று விட்டேன் என்றும் இனி உன் குழந்தை எவனுடனும் வாழவே முடியாது என்றும் தொடர்ந்து கொலை மிரட்டல் விட்டு வந்ததாகவும் கூறினர். மேலும் சின்ன குழந்தைகளுடன் ஆபாசமாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்ததால், கோவை சைபர் கிரைம் புகார் கொடுத்து அதனடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். யூடியூப் வலைதளத்தில் இதுபோன்ற தவறாக பேசிவரும் அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் அந்த சேனல்களையும் உடனடியாக முடக்க வேண்டும் எனவும் அந்த தம்பதியினர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

click me!