விஜய் சாவுக்கு, ஷாயின்சா காரணம் என உறுதியானது. இதனால், தனது அண்ணனின் சாவுக்கு பழிக்குப் பழி வாங்கவே ஷாயின்சாவுடன் நெருங்கிப் பழகினேன். அப்போது, விஜய் மரணம் குறித்து கேட்டபோது, பதில் சொல்லாமல் மழுப்பலாக பேசினார். அதை பற்றி மீண்டும் பேசினால், உனது அண்ணனுக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் என மிரட்டினார்.
கேளம்பாக்கத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு, டவலால் கழுத்து இறுக்கி கொலை செய்த வழக்கில் கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் காமராஜர் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ஷாயின்ஷா(26). திருமணம் முடிந்து கணவர் இறந்த நிலையில் 12 வயதில் ஒரு மகன், 7 வயதில் ஒரு மகன் உள்ளனர். ஷாயின்ஷாவின் அம்மா மற்றும் 2 மகன்கள் உடன் வாடகை வீட்டில் கடந்த 10 நாட்களாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2ம் தேதி ஷாயின்சா கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஷாயின்சா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தினர்.
இதுதொடர்பாக கொட்டிவாக்கத்தை சேர்ந்த கார்த்திக் (19) மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். தனது அண்ணன் விஜய் என்பவருடன் ஷாயின்சாவுக்கு பழக்கம் இருந்தது. கடந்த, சில மாதங்களுக்கு முன் விஜய், செங்கல்பட்டு அருகே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்தது. அதன்படி, விஜய் சாவுக்கு, ஷாயின்சா காரணம் என உறுதியானது. இதனால், தனது அண்ணனின் சாவுக்கு பழிக்குப் பழி வாங்கவே ஷாயின்சாவுடன் நெருங்கிப் பழகினேன். அப்போது, விஜய் மரணம் குறித்து கேட்டபோது, பதில் சொல்லாமல் மழுப்பலாக பேசினார். அதை பற்றி மீண்டும் பேசினால், உனது அண்ணனுக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் என மிரட்டினார்.
இதைதொடர்ந்து, கடந்த 2ம் தேதி மது அருந்தி விட்டு, ஷாயின்சா வீட்டுக்கு எனது நண்பர்களுடன் சென்றேன். அங்கு, அவரை கூட்டு பலாத்காரம் செய்து டவலால் ஷாயின்சாவை கழுத்தை நெரித்து கொன்றேன் என கார்த்திக் தெரிவித்தார். இதனையடுத்து, 3 பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.