சென்னை பெரம்பூர் நாராயண மேஸ்திரி 2வது தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (41). இன்னும் திருமணமாகவில்லை. இவருக்கும் கொசப்பேட்டை சின்னத்தம்பி தெருவை சேர்ந்த பிரியா (42) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
விடுதியில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்த போது தகராறு செய்த காதலனை கொலை செய்துவிட்டு, நாடகமாடிய கள்ளக்காதலி கைது செய்யப்பட்டார்.
சென்னை பெரம்பூர் நாராயண மேஸ்திரி 2வது தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (41). இன்னும் திருமணமாகவில்லை. இவருக்கும் கொசப்பேட்டை சின்னத்தம்பி தெருவை சேர்ந்த பிரியா (42) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில், இவர்கள் இருவரும் பெரியமேடு, ஆர்.எம். சாலையில் உள்ள விடுதியில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, அலறிய படி ஓடிவந்த பிரியா விடுதியின் மேலாளரிடம் என்னுடன் வந்தவர் திடீரென அதிக அளவு மது குடித்ததால் மயங்கி விட்டதாக கதறிய படி கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- ஆறிபோன டீயை கொடுக்கிறாயா? திட்டிய மாமியாரை கதறவிட்டு தீர்த்து கட்டிய மருமகள்.. எப்படி தெரியுமா?
உடனே விடுதியின் மேலாளர் சென்று பார்த்த போது சுயநினைவின்றி பிரகாஷ் இறந்து கிடந்தார். இந்தத சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்து கிடந்த பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- எனக்கு வயசு ஆச்சுன்னு! கழட்டி விட்டுட்டு வாலிபருடன் உல்லாசமாக இருந்ததால் கொன்றேன்!பாமக நிர்வாகி கொலையில் பகீர்
இதுகுறித்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கள்ளக்காதலி பிரியாவிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். விசாரணையில் சம்பவத்தின்போது பிரகாசும், பிரியாவும் மதுபோதையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலி தாக்கியுள்ளார். அதை மறைப்பதற்கு நாடகமாடியதும் தெரியவந்தது. இதில், பிரகாஷ் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.