காதலனை நினைத்து கலங்கிய நந்தினி..காட்டுப்பகுதிக்கு வரழைத்து உல்லாசம்.. இறுதியில் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்தகதி

Published : Oct 04, 2021, 06:39 PM ISTUpdated : Oct 04, 2021, 06:41 PM IST
காதலனை நினைத்து கலங்கிய நந்தினி..காட்டுப்பகுதிக்கு வரழைத்து உல்லாசம்.. இறுதியில் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்தகதி

சுருக்கம்

பழைய காதலனை பிரிய மனமில்லாத நந்தினி போரம் அருகே உள்ள காட்டுப்பகுதியில்  அடிக்கடி கள்ளக்காதலனை வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இது கணவர் பாண்டித்துரைக்கு தெரிந்ததால் மனைவியை கண்டித்துள்ளார். 

திருமணமான 4 மாதத்தில் கள்ளக்காதல் விவகாரத்தால் கணவனை கொலை செய்ததாக மனைவி போலீசாரிடம் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் அடுத்த போரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டிதுரை (29). இவருக்கும் கறம்பக்குடியை சேர்ந்த நந்தினி (23). இருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 20ம் தேதி கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது, கணவர் பாண்டித்துரை தன் கழுத்தை நெரிந்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்து அருகே இருந்த கத்தியை எடுத்து கணவர் பாண்டித்துரையின் தலையில் அடித்ததாகவும் அதில் அவர் இறந்துவிடவே சடலத்தை வீட்டின் அருகே உள்ள கிணற்றில் வீசியதாகவும் முதலில் கூறியுள்ளார். இதனையடுத்து, நந்தினி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். 

அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் நந்தினி வேலை பார்த்தபோது வாராப்பூர் ஊராட்சியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், அது காதலாக மாறியது. இந்நிலையில், பாண்டித்துரைக்கும் நந்தினிக்கும் திருமணம் நடந்தது. பழைய காதலனை பிரிய மனமில்லாத நந்தினி போரம் அருகே உள்ள காட்டுப்பகுதியில்  அடிக்கடி கள்ளக்காதலனை வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இது கணவர் பாண்டித்துரைக்கு தெரிந்ததால் மனைவியை கண்டித்துள்ளார். இதில், தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக பாண்டித்துரையை கொலை செய்ய திட்டமிட்டு கடந்த 20ம் தேதி கொலை செய்துள்ளார். 

இதையும் படிங்க;- 30 வயது வாலிபருடன் 40 வயது பெண் லாட்ஜில் இரவு முழுவதும் உல்லாசம்.. இறுதியில் கள்ளக்காதல் ஜோடி எடுத்த முடிவு.!

மேலும், நந்தினியில் கள்ளக்காதலனை பிடித்து விசாரித்ததில் நந்தினியிடம் பழகியதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், இந்த கொலைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவருகிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!
திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு