பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க மாட்டேன்… 72 வயதில் தாய் எடுத்த சோகமான முடிவு..!

Published : Oct 04, 2021, 09:55 AM IST
பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க மாட்டேன்… 72 வயதில் தாய் எடுத்த சோகமான முடிவு..!

சுருக்கம்

சில தினங்களாகவே தான் அனைவருக்கும் பாரமாக இருக்கிறேன் என தமது பிள்ளைகளிடம் ரோஸ் மேரி புலம்பிவந்ததாக கூறப்படுகிறது.

சில தினங்களாகவே தான் அனைவருக்கும் பாரமாக இருக்கிறேன் என தமது பிள்ளைகளிடம் ரோஸ் மேரி புலம்பிவந்ததாக கூறப்படுகிறது.

சென்னை அம்பத்தூரை அடுத்த புதூர் பானு நகரைச் சேர்ந்தவர் ரோஸ்மேரி. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் மூன்று மகன்கள், ஒரு மகள் என அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் ரோஸ்மேரிக்கு சில நாட்களுக்கு முன்னர் மூட்டு வலி ஏற்பட்டு தனியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தமது வீட்டிலேயே தனியாக இருந்துள்ளார்.

ரோஸ்மேரிக்கு அவரது மகன்கள் மூவரும் மாறி, மாறி மூன்று வேளையும் உணவு கொடுத்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தாம் அனைவருக்கும் சுமையாக இருப்பதாக ரோஸ்மேரி கூறிவந்துள்ளார். இந்தநிலையில் நேற்றிரவு வீட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு ரோஸ்மேரி தமது உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். வீட்டின் உள்ளெ இருந்து புகை வருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ரோஸ்மேரியின் மகன்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து கதவை உடைத்து பார்க்கும்போது ரோஸ்மேரி தீக்கிரையாகிக் கிடந்தார்.

மூதாட்டியின் தற்கொலை குறித்து அம்பத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயதான காலத்தில் பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க மாட்டேன் என தாய் எடுத்த விபரீத முடிவு அவரது பிள்ளைகள், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!