அடிப்பாவி.. கள்ளத்தொடர்பால் பிறந்த குழந்தை.. தீயில் வீசி கொன்ற காமக்கொடூர தாய்..!

Published : Aug 01, 2021, 04:03 PM ISTUpdated : Aug 01, 2021, 04:05 PM IST
அடிப்பாவி.. கள்ளத்தொடர்பால் பிறந்த குழந்தை.. தீயில் வீசி கொன்ற காமக்கொடூர தாய்..!

சுருக்கம்

துணிக்கடையில் வேலை செய்து வந்த சங்கீதாவுக்கு அப்பகுதியை சேர்ந்த குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், குமாருடன் அடிக்கடி சங்கீதா உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அதனால், கர்ப்பிணியான சங்கீதாவுக்கு குறைமாதத்தில் ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. 

கள்ளத்தொடர்பால் இறந்த நிலையில் பிறந்த குழந்தையை தீயில் வீசி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த இந்திராநகரில் உள்ள குப்பைத் தொட்டியில் தொப்புள் கொடியுடன் எரிந்த நிலையில் ஆண் குழந்தையின் சடலம் கிடந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில்  உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில், சம்பவத்தன்று அப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் குப்பை தொட்டியில் குப்பைகளை கொட்டி சென்றனர். அதில், ஒரு பெண் மட்டும் பையில் எதையோ எடுத்து வந்து போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்த போது இந்த பெண் இந்திராநகர் 2ம் பிளாக் மாற்றுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சங்கீதா(29) என தெரியவந்தது. மேலும், இவர் நெய்வேலி நகர காவல் நிலையம் எதிரில்  உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அவர்தான் குழந்தையின் சடலத்தை குப்பையில் போட்டுச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அப்பபெண்ணை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவர் கூறுகையில்;- துணிக்கடையில் வேலை செய்து வந்த சங்கீதாவுக்கு அப்பகுதியை சேர்ந்த குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், குமாருடன் அடிக்கடி சங்கீதா உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அதனால், கர்ப்பிணியான சங்கீதாவுக்கு குறைமாதத்தில் ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. இதனால், ஆண் குழந்தையின்  உடலை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்த குமார், சங்கீதா முடிவு செய்தனர். 

இதனையடுத்து, சம்பவத்தன்று குப்பை தொட்டியில் குப்பை எரிந்து கொண்டிருந்தபோது இந்த தீயில் குழந்தையின் சடலத்தை வீசி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் சங்கீதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!