சென்னையில் பயங்கரம்... கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டுத்தள்ள முயற்சித்த 16 வயது மனைவி..!

Published : Jul 06, 2021, 07:01 PM IST
சென்னையில் பயங்கரம்... கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டுத்தள்ள முயற்சித்த 16 வயது மனைவி..!

சுருக்கம்

கருப்பசாமியின் மனைவியான சிறுமியும் வசந்தகுமாரும் பள்ளியில் பயிலும்போது காதலித்து வந்துள்ளனர். வசந்தகுமார் இந்த சிறுமியின் பழைய காதலர் என்பதும் இவர்கள் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. 

சென்னையில் கள்ளக்காதலுடன் சேர்ந்து 16 வயது மனைவி கணவனை கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை எண்ணூர் பகுதியில் வசித்து வருபவர் தூத்துக்குடி மாவட்டம் கத்தாலம்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி(30).  இவர் மணலி ஆண்டார்குப்பம் பகுதியில் உள்ள உணவகத்தில் சப்ளையராக பணிபுரிந்து வந்துள்ளார். அதே உணவகத்தில் ஜோதியும் அவருடைய மகளும் ஒன்றாக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த பழக்கத்தில் ஜோதி மகளான சிறுமியை கருப்பசாமிக்கு கடந்த ஆண்டு தூத்துக்குடியில் திருமணம் செய்து வைத்தார்.

திருமணமான ஒரு மாதத்தில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த பெண் தாய் வீட்டிற்கு சென்று கருப்பசாமி மனைவியை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென பேசிக் கொண்டு இருக்கும்போது அதே பகுதியை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் வந்து கருப்பசாமியின் பின் தலையில் கத்தியால் வெட்டியுள்ளார். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனையடுத்து கருப்புசாமியை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக  கருப்புசாமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வசந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில், கருப்பசாமியின் மனைவியான சிறுமியும் வசந்தகுமாரும் பள்ளியில் பயிலும்போது காதலித்து வந்துள்ளனர். வசந்தகுமார் இந்த சிறுமியின் பழைய காதலர் என்பதும் இவர்கள் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.  இதனையடுத்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி