ரவுடி மகனுடன் சேர்ந்து தாய் செய்யும் காரியாமா இது? விசாரணையில் வெளியான பகீர் தகவல்..!

Published : Jul 05, 2021, 12:57 PM IST
ரவுடி மகனுடன் சேர்ந்து தாய் செய்யும் காரியாமா இது? விசாரணையில் வெளியான பகீர் தகவல்..!

சுருக்கம்

அடிக்கடி சபரிமலைக்கு செல்வாராம். அப்படி செல்லும்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு குறிப்பிட்ட கடையில் பொருட்கள் வாங்குவது வழக்கம். 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கடை உரிமையாளரான பாட்டியின் 14 வயது பேத்தியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

மதுரையை சேர்ந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று குடும்பம் நடத்திய சென்னையை சேர்ந்த ரவுடியை போலீசார் போக்சோவில் கைது செய்து செய்தனர்.

சென்னை, காசிமேடு, காசிபுரத்தைச் சேர்ந்தவர் தேசப்பன் (21). பிரபல ரவுடியான இவர் மீது, கொலை, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள், நிலுவையில் உள்ளன. இவர், அடிக்கடி சபரிமலைக்கு செல்வாராம். அப்படி செல்லும்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு குறிப்பிட்ட கடையில் பொருட்கள் வாங்குவது வழக்கம். 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கடை உரிமையாளரான பாட்டியின் 14 வயது பேத்தியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

பின்னர், மொபைல்போன் மூலம் நட்பு ஏற்பட்டு இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தேசப்பன், அந்த சிறுமியை ஆசையை வார்த்தை கூறி ரகசியமாக சென்னைக்கு கடத்தி வந்து குடும்பம் நடத்தினார். தற்போது 17 வயதான அந்த சிறுமி, 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் அக்கம் பக்கத்தினர் குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து, ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில் தேசப்பன் சிறுமியை திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக, தேசப்பனின் தாய் கீதா இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து கீதாவும், தேசப்பனும் கைது செய்யப்பட்டனர். தேசப்பன் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிறுமியை மீ்ட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி