கள்ளக்காதலனை நம்பி போன இதுதான் கதி... கஞ்சா போதையில் சிறுமையை கொடூரமாக பலாத்காரம் செய்து கொன்ற கொடூரன்..!

Published : Apr 08, 2021, 06:55 PM ISTUpdated : Apr 08, 2021, 07:00 PM IST
கள்ளக்காதலனை நம்பி போன இதுதான்  கதி... கஞ்சா போதையில் சிறுமையை கொடூரமாக பலாத்காரம் செய்து கொன்ற கொடூரன்..!

சுருக்கம்

 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ். இவருக்கும் அதே பகுதியில் உள்ள ஒரு இளம்பெண்ணுடன் அலெக்ஸுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தனிமையில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்களது கள்ளக்காதல் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததால் மனைவியை கண்டித்துள்ளார். 

ஆனால் அலெக்ஸ் மீதான கள்ளக்காதலை அந்த பெண் வீடவில்லை. இதனால் கணவருடன் வசித்தால் கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்த அந்த பெண் தனது 5 வயது பெண் குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார். இந்நிலையில் அந்த பெண்ணையும், 5 வயது குழந்தையையும் அலெக்ஸ் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த குழந்தையை தன் குழந்தை போல் வளர்ப்பதாகவும் அலெக்ஸ் வாக்கு உறுதி கொடுத்துள்ளார். இதையடுத்து இருவரையும் அழைத்துக் கொண்டு கேரளாவில் வீடு எடுத்து மூவரும் தங்கியுள்ளனர்.

ஆனால் அலெக்ஸ் வேலைக்கே செல்லாமல் கஞ்சா, போதை மயக்கத்தில் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் வீட்டுச் செலவிற்காக அந்த பெண் தனது குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு கூலி வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அந்த பெண் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது வீட்டில் 5 வயது சிறுமி மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதனால் அதிர்ந்த அந்த பெண் உடனடியாக மகளை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். உடல் முழுவதும் காயமிருந்த நிலையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், குழந்தையின் அம்மா அதிர்ந்து போனார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போதையில் சிறுமியை பலாத்காரம் செய்ததை அலெக்ஸ் ஒப்புக் கொண்டதை அடுத்து அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!