காதல் மனைவியை கதற கதற கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர்... போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்..!

Published : Apr 08, 2021, 05:16 PM IST
காதல் மனைவியை கதற கதற கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர்... போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்..!

சுருக்கம்

குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கண்டித்த காதல் மனைவியை கொடூரமாக குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கண்டித்த காதல் மனைவியை கொடூரமாக குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணார் முதல் தெருவில் வசிப்பவர் ராஜ கோபால் (28). இவர் சலூன் கடை நடத்தி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முக்கூடல் பகுதியை சேர்ந்த தனது உறவினர் பெண்ணான மல்லிகா (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், குழந்தை இல்லை. மல்லிகா ஆலங்குளத்தில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். 

ராஜகோபாலுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனை அவரது மனைவி கண்டித்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  இருமுறை மல்லிகா கணவர் மீது புகார் அளித்துள்ளார். போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை ராஜகோபால் குடித்து விட்டு மல்லிகா வேலை பார்த்து கொண்டிருந்த அலுவலகத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். 

அப்போது தகராறு முற்றவே அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மல்லிகாவை சரமாரியாக குத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம்கேட்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த சேகர் மனைவி மாரியம்மாள் என்பவர் ஓடிவந்து ராஜகோபாலை தடுக்க முயன்றார். அப்போது, அவரையும் ராஜகோபால் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த  மல்லிகா, மாரியம்மாள் ஆகியோரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார். மாரியம்மாளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ராஜ கோபாலை தேடி வந்தனர்.

இதனையடுத்து, மதுபோதையில் மயங்கி கிடந்த ராஜகோபாலை கைது செய்தனர்.அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கூறி அடிக்கடி மல்லிகா கண்டித்து வந்ததால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தேன் என கணவர் கூறியுள்ளார். காதல் மாணவியை கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி