சினிமா டயலாக் பேசி 9 பெண்களை திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ளிய வாலிபர்... வெளியாக பகீர் தகவல்..!

Published : Apr 05, 2021, 06:56 PM IST
சினிமா டயலாக் பேசி 9 பெண்களை திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ளிய வாலிபர்... வெளியாக பகீர் தகவல்..!

சுருக்கம்

பல பெண்களின் பின்னால் சுற்றி அவர்களிடம் திரைப்பட வசனங்களை பேசி  9 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி பாலியல் தொழிலில் தள்ளிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.   

பல பெண்களின் பின்னால் சுற்றி அவர்களிடம் திரைப்பட வசனங்களை பேசி  9 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி பாலியல் தொழிலில் தள்ளிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் அருண்குமார்(32). இவர் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ளிவிட்டதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறி இவரது மனைவிகள் 2 பேர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 

அருண்குமார் எந்த வேலைக்கும் செல்லாமல் பல இடங்களில் சுற்றிந்திரிந்துள்ளார். அடிக்கடி சினிமா பார்க்கும் பழக்கமுடைய அருண்குமார், பல பெண்களின் பின்னால் சுற்றி அவர்களிடம் திரைப்பட வசனங்களை பேசி தனது காதல் வலையில் விழவைத்துள்ளார். பின்னர், அவர்களை திருமணம் செய்துள்ளார். குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் மிகவும் பட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு அந்த பெண்களை தள்ளியதும் விசாரணையில் தெரியவந்தது. 

இதுவரை அருண்குமார் 9 பெண்களை திருமணம் செய்து அவர்களை பாலியல் தொழிலில் தள்ளியது தெரியவந்தது. இதற்கிடையில் அருண்குமாருக்கு கஞ்சா கடத்தல் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டு கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அருண்குமார் வசித்த வீட்டை சோதனை செய்த போது துப்பாக்கி, வீச்சரிவாள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றியுள்ளனர். அருண்குமார் மீது புகார் அளித்தவர்கள் முதல் மற்றும் 2வது மனைவி என்பது தெரியவந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!