நாங்கள் உல்லாசமாக இருப்பதை உன்னால் தடுக்க முடியாது.. கூலிப்படையை வச்சு போட்டு தள்ளிடுவேன்.. மனைவி மிரட்டல்.!

Published : Jul 18, 2021, 03:39 PM IST
நாங்கள் உல்லாசமாக இருப்பதை உன்னால் தடுக்க முடியாது.. கூலிப்படையை வச்சு போட்டு தள்ளிடுவேன்.. மனைவி மிரட்டல்.!

சுருக்கம்

 எங்கள் இருவரையும்  உன்னால் ஒன்றும் பண்ண முடியாது, என்று தகாத வார்த்தையில் பேசினாள். மேலும் கூடிய  சீக்கிரம் நானும், பெஞ்சமின் பிராங்க்ளினும் சேர்ந்து  கூலிப்படையை வைத்து உன்னை கொன்று விடுவோம், என்று மிரட்டினாள். 

எனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட அந்தரங்க படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க 10 லட்சம் கேட்டு போலீஸ்காரர் மிரட்டுவதாகவும், என்னை கூலிப்படை வைத்து கொலை செய்து விடுவதாக மனைவி மிரட்டுவதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  ஜெயபிரகாஷ் என்பவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மண்ணடி நைனியப்பன் தெருவை சேர்ந்த ஜெயபிரகாஷ். நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், நான் மண்ணடியில் கூரியர்  தொழில் செய்து வருகிறேன். எனக்கும், ரூபாவதி  என்பவருக்கும் கடந்த 2002ம் ஆண்டு திருமணம்  நடந்தது. எங்களுக்கு கல்லூரி படிக்கும் வயதில் ஒரு மகள் உள்ளான். என்னுடைய அலுவலகம் முத்தியால்பேட்டை காவல் நிலையம் எதிரே உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு எனது  மனைவி ரூபாவதி எனது அலுவலகம் வந்து சென்றபோது, முத்தியால்பேட்டை காவல் நிலைய காவலர் பெஞ்சமின்  பிராங்களின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த ஜூன் 6ம் தேதி எனது மனைவி திடீரென தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாள். இதுபற்றி அவளிடம் கேட்டபோது, முத்தியால்பேட்டை காவல்  நிலைய காவலர் பெஞ்சமின் பிராங்க்ளின், அடிக்கடி என்னை  லாட்ஜுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார். அதனை வீடியோ  எடுத்து வைத்துக்கொண்டு, என்னை பணம் கேட்டு மிரட்டுகிறார் என தெரிவித்தாள்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றுள்ளார். இது பற்றி அறிந்த பெஞ்சமின் பிராங்களின், எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, அதை ஏற்க மறுத்த போலீசார், என் மீது பொய் வழக்கு போட்டு விடுவேன் என்று  மிரட்டுகின்றனர். இதனையடுத்து, மனைவி மீது சந்தேகம்  ஏற்பட்டதையடுத்து, அவரது செல்போனை எடுத்து பார்த்த போது காவலர் பெஞ்சமின் பிராங்க்ளின்,  என் மனைவி ரூபாவதி ஆகியோரின் அந்தரங்க புகைப்படமும் கிடைத்தது.

இதனால், ஆத்திரமடைந்து மனைவியிடம் விசாரித்தேன். அப்போது,  எங்கள் இருவரையும்  உன்னால் ஒன்றும் பண்ண முடியாது, என்று தகாத வார்த்தையில் பேசினாள். மேலும் கூடிய  சீக்கிரம் நானும், பெஞ்சமின் பிராங்க்ளினும் சேர்ந்து  கூலிப்படையை வைத்து உன்னை கொன்று விடுவோம், என்று மிரட்டினாள். இதனிடையே, கடந்த  14ம் தேதி பெஞ்சமின் பிராங்க்ளின் என்னை தொடர்புகொண்டு, உனது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும்  வீடியோவை உனது உறவினர்களிடமும், சமூக  வலைதளங்களிலும் பரப்பி விடுவேன். அவ்வாறு செய்யாமல் இருக்க எனக்கு ரூ.10 லட்சம் தரவேண்டும் என்று மிரட்டினார்.

ஆனால் பணம் தரமுடியாது என்று  கூறிவிட்டேன். பெஞ்சமின் பிராங்க்ளின் மற்றும்  எனது மனைவி ரூபாவதியால் என் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து  உள்ளது. எனவே காவலர் பெஞ்சமின் பிராங்களின் மற்றும் என்னுடைய மனைவி  ரூபாவதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மக்களை காக்கும் காவலரே கள்ளக்காதல், பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Sathankulam Case: இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?
பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி... லஷ்கர்-இ-தொய்பா பயங்கர ஸ்கெட்ச்..! டெல்லியில் பரபரப்பு..!