நடத்தையில் தீராத சந்தேகம்.. நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவர்..!

Published : Jul 17, 2021, 08:05 PM ISTUpdated : Jul 19, 2021, 04:52 PM IST
நடத்தையில் தீராத சந்தேகம்.. நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவர்..!

சுருக்கம்

ஆத்திரம் தாங்காமல் இருந்த கணவர், மனைவி தூங்கிய போது கழுத்தை இறுக்கி துடிதுடிக்க கொலை செய்தார். இதையடுத்து கருப்பன் ரேவதியின் அண்ணனுக்கு போன் செய்து உன் தங்கச்சி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவளை கொலை செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை இறுக்கி துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம்  கொங்கம்பாளையம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கருப்பன் (30). மினி ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி ரேவதி (26). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், திடீரென மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதனையடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர் சமாதானம் செய்து வைத்தனர். ஆனால், மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், ரேவதி தூங்கச் சென்றார். ஆத்திரம் தாங்காமல் இருந்த கணவர், மனைவி தூங்கிய போது கழுத்தை இறுக்கி துடிதுடிக்க கொலை செய்தார். இதையடுத்து கருப்பன் ரேவதியின் அண்ணனுக்கு போன் செய்து உன் தங்கச்சி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவளை கொலை செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார். 

இதனால், அதிர்ச்சியடைந்த அவரது அண்ணன் உறவினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அலறியடித்துக்கொண்டு வீட்டுக்கு சென்று பார்த்த போது ரேவதி சடலமாக கிடந்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அவரது கணவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி