பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கணவனை போட்டு தள்ளிய மனைவி! 18 வயது மகனும் உடந்தை! ஓராண்டுக்கு பின் சிக்கியது எப்படி?

By vinoth kumar  |  First Published Aug 1, 2024, 12:01 PM IST

மதுரை மாவட்டம்  திரு மங்கலம் அசோக்நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம்(42). ராணுவவீரர். இவரது மனைவி ஜோதி(36). இந்த தம்பதிக்கு 18 வயதில் மகன் உள்ளார். விடுமுறைக்கு வந்த தர்மலிங்கம் கடந்தாண்டு ஏப்ரல் 3ம் தேதி நடந்த விபத்தில் உயிரிழந்தார். 


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ராணுவ வீரரை வேன் ஏற்றி கொலை செய்த சம்பவம் தொடர்பாக மனைவி, அவரது 18 வயது மகன் உள்ளிட்ட 5 பேர் ஓராண்டு பிறகு கைது செய்யப்பட்டனர். 

மதுரை மாவட்டம்  திருமங்கலம் அசோக்நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம்(42). ராணுவவீரர். இவரது மனைவி ஜோதி(36). இந்த தம்பதிக்கு 18 வயதில் மகன் உள்ளார். விடுமுறைக்கு வந்த தர்மலிங்கம் கடந்தாண்டு ஏப்ரல் 3ம் தேதி நடந்த விபத்தில் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தர்மலிங்கம் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: பள்ளி மாணவனை கரெக்ட் செய்து டியூசன் ஆசிரியை உல்லாசம்! விஷயம் தெரிந்த பெற்றோர்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

இதுகுறித்து போலீசார் கூறுகையில்: தர்மலிங்கத்தின் மனைவி ஜோதி பால்பாண்டி என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், இவரது காதலுக்கு ஜோதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து தர்மலிங்கத்திற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் பால்பாண்டியை மறக்க முடியாததால் ஜோதி அவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் நாளடைவில் கணவர் தர்மலிங்கத்துக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். 

இதையும் படிங்க:  ஓயாமல் சண்டை! குடும்பம் நடத்த அழைத்த கணவர்! வர மறுத்த மனைவியை கதறவிட்டு கொடூர கொலை!

இதனால் ஆத்திரமடைந்த மனைவி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி விடுமுறைக்கு ஊருக்கு வந்த தர்மலிங்கம் இருசக்கர வாகனத்தில் சென்றபோது திட்டமிட்டு வேனை ஏற்றி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து கொலை வழக்காக மாற்றிய போலீசார் மனைவி ஜோதி, கொலைக்கு உதவியாக இருந்த 18 வயது மகன், டிரைவர் பாண்டி, கிளீனர் அருண்குமார், உக்கிரபாண்டி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள பால்பாண்டியை தேடிவருகின்றனர்.

click me!