முதியவருடன் கள்ளக்காதல் ! உல்லாசத்துக்கு மறுத்ததால் காதலியை போட்டுத் தள்ளிய காதலன் தூக்கில் தொங்கி தற்கொலை !!

Published : Apr 05, 2019, 11:12 PM IST
முதியவருடன் கள்ளக்காதல் !  உல்லாசத்துக்கு மறுத்ததால் காதலியை போட்டுத் தள்ளிய காதலன் தூக்கில் தொங்கி தற்கொலை !!

சுருக்கம்

சேலம் அருகே விவாகரத்தான பெண்  ஒருவருடன் கள்ளக் காதலில் ஈடுபட்ட முதியவர் ஒருவர், காதலியை உல்லாசத்துக்கு அழைத்தபோது  மறுத்ததால் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்

சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் சித்தாரா என்பவர் வசித்து வந்தார். 25 வயதான இவருக்கு    திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துப் பெற்று தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் சித்தாராவுக்கும் அதே ஊரைச்சேர்ந்த இனாமுல்லா என்ற முதியவருக்கும்  கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் பின்னர் கள்ளக் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதனிடையே சூரமங்கலம் சுப்பிரமணியன் நகரில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் கடையில் கடந்த 7 மாதத்துக்கு முன் சித்தாரா வேலைக்குச் சேர்ந்துள்ளார். தொடர்ந்து அங்கேயே வேலை செய்து வந்துள்ளார்.

சித்தாராவுக்கும் இனாமுல்லாவுக்கும் இடையே இருந்தத கள்ளக் காதல் குறித்து  அவர்களது உறவினர்களுக்கு தெரியவர கடந்த மாதம் ஜமாத்தை கூட்டி இரு வீட்டாரையும் வைத்து பஞ்சாயத்து பேசியுள்ளனர்.

இனி இருவரும் தங்கள் பழக்கத்தை கைவிடவேண்டும் என ஜமாத்தார் பேச்சு வார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது. அதை ஏற்று சித்தாரா இனாமுல்லாவுடன் பேசுவதை நிறுத்தினார். ஆனால் இனாமுல்லாவால் அவரை மறக்க முடியவில்லை. இதையடுத்து அவர் சித்தாராவுடன் பேச முயற்சிக்க அவர் சுத்தமாக அவரை தவிர்த்துவிட்டார்.

இந்நிலையில் இனாமுல்லா இன்று  சித்தாரா வேலை செய்யும் ஐஸ்கிரீம் கடைக்கு சென்றுள்ளார். கடையில் யாருமில்லாத நிலையில் சித்தாரா உல்லாசமாக இருக்க இனாமுல்லா வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் சித்தாரா இதற்க மறுக்கவே ஆத்திரமடைந்த இனாமுல்லா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சித்தாரா கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அங்கேயே கயிற்றில் தூக்கிட்டு அவரும் தற்கொலை செய்துக்கொண்டார். 

கடைக்குள் இந்த சம்பவம் நடக்கும்போது யாரும் இல்லாததால் இது யாருக்கும் தெரியவில்லை. பின்னர் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் ரத்த வெள்ளத்தில் சித்தாரா கிடப்பதையும், தூக்கில் இனாமுல்லா தொங்குவதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து சூரமங்கலம் போலீஸுக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

காட்டுப்பகுதியில் கள்ளக்காதல் ஜோடி! அந்த நேரத்தில் வந்த போன் கால்! கடுப்பான வெங்கடேஷ்! 600 அடி பள்ளத்தில் சுமதி!
அலறி கூச்சலிட்ட 65 வயது பாட்டி.! கதறியும் விடாத 45 வயது மும்மூர்த்தி.! நடந்தது என்ன?