ஆண்மைப் பரிசோதனைக்கு வந்த காமக்கொடூரன் சந்தோஷ்குமார் மீது பொதுமக்கள் கொலைவெறித் தாக்குதல்...

Published : Apr 04, 2019, 03:20 PM IST
ஆண்மைப் பரிசோதனைக்கு வந்த காமக்கொடூரன் சந்தோஷ்குமார் மீது பொதுமக்கள் கொலைவெறித் தாக்குதல்...

சுருக்கம்

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற காமக்கொடூரன் சந்தோஷ் குமாரை பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கினர். அவருக்குக் காவலுக்கு வந்திருந்த போலீஸார் கொஞ்சம் உஷாராகி அவனைக் காருக்குள் கொண்டு செல்லாமல் இருந்திருந்தால் விபரீதமாக ஏதாவது நிகழ்ந்திருக்கும் என்னுமளவுக்கு அவன் மீது கோபத்தில் இருந்தனர் பொது மக்கள்.

கோவை துடியலூர் சிறுமி கொலை வழக்கில் சந்தோஷ்குமார்  தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து  நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை ஏப்ரல் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கோவை மருத்துவமனை ஒன்றுக்கு ஆண்மை பரிசோதனைக்காக சந்தோஷ்குமார் அழைத்து வரப்பட்டிருந்தார். பரிசோதனை முடிந்து மருத்துவமையிலிருந்து அவர் முகத்தை ஒரு துணியால் மூடிக்கொண்டு  வெளியேறும்போது தகவல் அறிந்து காத்திருந்த ஒரு சில்ல பொதுமக்கள் சந்தோஷ்குமாரை சூழ்ந்துகொண்டு வெறித்தனமாகத் தாக்க ஆரம்பித்தனர். நிலைமை மோசமாகுமுன் போலீஸார்  சந்தோஷ்குமாரை தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சிய சம்பவம்.. கத்தியுடன் காவலரை விரட்டிய வாலிபர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்
காட்டுப்பகுதியில் கள்ளக்காதல் ஜோடி! அந்த நேரத்தில் வந்த போன் கால்! கடுப்பான வெங்கடேஷ்! 600 அடி பள்ளத்தில் சுமதி!