கோவை சிறுமி கொலை விவகாரம்! காமக்கொடூரன் சந்தோஷ் குமாருக்கு மக்களே கொடுத்த தண்டனை..! மருத்துவமனை வெளியே பரபரப்பு..!

Published : Apr 04, 2019, 03:10 PM ISTUpdated : Apr 04, 2019, 03:12 PM IST
கோவை சிறுமி கொலை விவகாரம்! காமக்கொடூரன் சந்தோஷ் குமாருக்கு மக்களே கொடுத்த தண்டனை..! மருத்துவமனை வெளியே பரபரப்பு..!

சுருக்கம்

கோவை துடியலூரில் துடியலூரில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரத்தில் சந்தோஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.  

கோவை துடியலூரில் துடியலூரில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரத்தில் சந்தோஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

சென்ற வாரம் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, சிறுமியின் வீட்டருகே தன் பாட்டியுடன் தங்கியிருந்த சந்தோஷ்குமார் அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டார்.

பின்னர் இதனை மறைக்க அவர் அணிந்திருந்த டி-ஷர்ட் கொண்டு சிறுமியின் உடலை சுற்றி யாருக்கும் தெரியாமல் அவர் வீட்டருகே உடலை வைத்து விட்டு பின்பு குழந்தையைத் தேடி வந்த பெற்றோருடன் சேர்ந்து கொண்டு சிறுமியை தேடும் நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்.

இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் சந்தோஷ்குமார் என நிரூபணம் செய்த பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் மருத்துவ பரிசோதனை முடிந்து மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தபோது அங்கிருந்த பொதுமக்கள் ஒன்று கூடி சந்தோஷ்குமாரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இப்படி ஒரு கேடுகெட்ட செயலை செய்து, குழந்தையின் உயிரை எடுத்த பாவியை சும்மா விடகூடாது என பொதுமக்களே சந்தோஷுக்கு சரமாரி அடி கொடுத்து வேதனையை சற்று தணித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சிய சம்பவம்.. கத்தியுடன் காவலரை விரட்டிய வாலிபர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்
காட்டுப்பகுதியில் கள்ளக்காதல் ஜோடி! அந்த நேரத்தில் வந்த போன் கால்! கடுப்பான வெங்கடேஷ்! 600 அடி பள்ளத்தில் சுமதி!