திருமணத்திற்கு மறுத்து வேறு ஒருவருடன் பழகிய காதலி! கத்தியால் குத்தி, தீ வைத்து எரித்த காதலன்!

Published : Apr 05, 2019, 02:47 PM IST
திருமணத்திற்கு மறுத்து வேறு ஒருவருடன் பழகிய காதலி! கத்தியால் குத்தி, தீ வைத்து எரித்த காதலன்!

சுருக்கம்

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலியை, அவருடைய காதலன் கத்தியால் குத்தி,  தீவைத்து எரித்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலியை, அவருடைய காதலன் கத்தியால் குத்தி,  தீவைத்து எரித்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நிதிஷ்.  இவர் திருச்சூரை சேர்ந்த நீத்து என்கிற இளம் பெண்ணை சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.  இந்நிலையில் திடீரென இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நீத்து, நிதிஷை விட்டு விலகி வேறு ஒரு நபருடன் பழகி வந்துள்ளார்.

ஆனால் நிதிஷ் தொடர்ந்து, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நீத்துவை வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை, நீத்துவை சமாதான படுத்துவதற்காக நிதிஷ், நீதுவின் வீட்டிற்கு நேரடியாக சென்றுள்ளார். அப்போது இருவரும் வீட்டில் அமர்ந்து சிறிது நேரம் பேசியுள்ளனர்.  திருமணம் செய்து கொள்ளுமாறு நிதிஷ் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

ஆனால் தொடர்ந்து திருமணத்தை மறுத்து வந்த, நீத்து மீது ஆத்திரம் அடைந்த நிதிஷ் தான் கையில் வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக தாக்கினார்.  மேலும் அருகில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்தார்.

நீத்துவின் அலறல் சத்தம் கேட்டு அவருடைய குடும்பத்தினர் ஓடி வந்து பார்க்கையில், நீத்து தீயில் கருகி கொண்டிருந்தார். உடனடியாக தீயை அணைத்து,  நிதிஷை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் நீத்துவை காதலித்து வந்ததையும்,  நீத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் அவரை கொலை செய்ததாகவும் ஒப்புக் கொண்டார்.

மேலும் தீக்காயமடைந்த நீத்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரளாவில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

காட்டுப்பகுதியில் கள்ளக்காதல் ஜோடி! அந்த நேரத்தில் வந்த போன் கால்! கடுப்பான வெங்கடேஷ்! 600 அடி பள்ளத்தில் சுமதி!
அலறி கூச்சலிட்ட 65 வயது பாட்டி.! கதறியும் விடாத 45 வயது மும்மூர்த்தி.! நடந்தது என்ன?