மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்தவர் தியான் சிங். இவரது மனைவி ஜோதி ரத்தோர். இந்த தம்பதிக்கு 3 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில்,ஜோதி ரத்தோருக்கு பக்கத்துவிட்டை சேர்ந்த இளைஞருடன் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை மகன் பார்த்துவிட்டதால் வெளியில் சொல்லிவிடுவானோ என பயந்து பெற்ற தாயே கொடூரமான முறையில் மகனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்தவர் தியான் சிங். இவரது மனைவி ஜோதி ரத்தோர். இந்த தம்பதிக்கு 3 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில்,ஜோதி ரத்தோருக்கு பக்கத்துவிட்டை சேர்ந்த இளைஞருடன் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி கணவர் வெளியூருக்கு சென்ற நிலையில் மனைவி பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த வாலிபருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதையும் படிங்க;- இரவில் ஒதுக்குப்புறமாக சந்தித்த காதல் ஜோடி! ரகசியமான நோட்டமிட்ட இளைஞர்கள்.. இறுதியில் நேர்ந்த பயங்கரம்.!
அப்போது தனது தாயை காணாமல் தேடி வந்த 3 வயது உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்துள்ளான். இதனால் எங்கே தனது கள்ளக்காதல் விஷயத்தை கணவரிடம் சொல்லிவிடுவானோ என்று பயந்த ஜோதி, பெற்ற மகன் என்று கூட பாராமல் மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். ஆனால், குழந்தை கீழே தவறி கீழே விழுந்து விட்டதாக கணவர் உள்ளிட்டவர்களை நம்ப வைத்துள்ளார்.
மகன் இறந்த பிறகு ஜோதிக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வந்துள்ளன. இதனால் பயந்துபோன ஜோதி தனது கணவரிடம் சென்று மகனை தான் தான் கொலை செய்ததாக கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத கணவர் அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தாய் அவரது நண்பர் இருவரையும் கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரத்தால் பெற்ற மகனையே தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.