தூத்துக்குடி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு நபரை காருடன் எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில், சந்தேகத்திற்கிடமான வகையில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கும், குளத்தூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த காரின் அருகில் சென்று பாரத்தபோது, காரின் பின்பக்க டிக்கியில் அடையாளம் காணமுடியாத வகையில் சடலம் பாதி எரிந்து கருகிய நிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக தீயை அணைத்து அப்பகுதியில் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு நேரிடையாக வந்து காரில் எரிந்த நிலையில் இருந்த சடலத்தை பார்வையிட்டு தனிப்படை அமைத்து இறந்த நபர் யார்?, குற்றவாளிகள் யார்? என உடனடியாக கண்டுபிடிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.
undefined
தடயவியல் நிபுணர்கள் கார் டிக்கியிலிருந்து பாதி எரிந்த நிலையில் சடலத்தை கைப்பற்றி ஆய்வு செய்ததில், கழுத்தில் அணிந்திருந்த செயின் மற்றும் இடுப்பில் அணிந்திருந்த வெள்ளி அரைஞாண் கயிற்றை வைத்து இறந்த நபர் ஆண் தான் என்பதை உறுதி செய்தனர்.
மேலும், காவல் துறையினர் தீப்பற்றி எரிந்த காரின் நம்பரை (TN64 F1587) வைத்து காரின் உரிமையாளர் நாகஜோதி என்பதைக் கண்டறிந்தனர். அதுமட்டுமின்றி சம்பவ இடத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட செல்போனை வைத்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரின் மகன் நாகஜோதி என்ற 48 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காரில் அவரது ஓட்டுநருடன் சென்ற நிலையில் காணவில்லை என அவரது குடும்பத்தினரால் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை - பெங்களூரு அதிவிரைவுச் சாலை புத்தாண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும்: நிதின் கட்கரி
இதனால் காவல் துறையினர் கார் டிக்கியில் வைத்து எரித்து கொலை செய்யப்பட்டிருக்கும் ஆண் நாகஜோதிதான் என உறுதி செய்து கொலை செய்த குற்றவாளிகளை தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.