நாகராஜன் நேற்று முன்தினம் காலை தனது விவசாய தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறி தனது இருசக்கர வாகனத்தில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை தேடி தோட்டத்துக்கு சென்றனர்.
பாலக்கோடு அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த பெரியானுர்செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகராஜன் (50). இவரது மனைவி வசந்தா (40). இவர்களுக்கு வினோத்குமார் (25), வினோதினி (23) என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நாகராஜன் நேற்று முன்தினம் காலை தனது விவசாய தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறி தனது இருசக்கர வாகனத்தில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை தேடி தோட்டத்துக்கு சென்றனர்.
தோட்டத்துக்கு செல்லும் வழியில் நாகராஜன் தலை, கழுத்து பகுதியில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நாகராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்ப நாய் மற்றும் தடவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு விசாரனை மேற்கொண்டு வந்தனர்.
இந்த கொலைக்கு வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் புதுப்பேட்டையை சேர்ந்த தேவராஜ் மகன் சதிஷ் (19) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக சிறுவன் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில்;- தன்னுடைய தாய் ரத்னா (45) உடன் நாகராஜன் கள்ள தொடர்பு வைத்துள்ளார். இதனை அறிந்த ரத்னாவின் மகன் கண்டித்துள்ளார். அப்படி இருந்த போதிலும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்து நாகராஜனை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி நாகராஜ் தோட்டத்திக்கு வருவதை உறுதி செய்தபின் நேற்று முன்தினம் காலை பட்டா கத்தியுடன் காத்திருந்ததாகவும், எதிர்பார்த்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த நாகராஜனை வெட்ட முயன்ற போது சுதாரித்து கொண்டு இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பி ஓட முயன்ற போது துரத்தி சென்று தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டி கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். பஞ்சப்பள்ளி போலீசார் கொலைக்கு பயன்படுத்திய பட்டாகத்தியை பறிமுதல் செய்த போலீசார் சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.