ரதீஷ்குமாருக்கு போன் செய்து, கடைசி முறையாக எனது பிறந்த நாளில் உன்னை பார்க்க விரும்புகிறேன். இனி தொந்தரவு செய்யமாட்டேன். நான் உணவு கொண்டு வருகிறேன். ஒன்றாக சாப்பிடலாம் என்று கூறி கெஞ்சியுள்ளார்.
கள்ளக்காதலை துண்டித்ததால் இஎஸ்ஐ மருந்தகத்தில் பணியாற்றும் ஊழியரை பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியை ஒருவர் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் ரதீஷ்குமார்(35). ஆரல்வாய்மொழியில் உள்ள இஎஸ்ஐ மருந்தகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். அப்போது, மணவாளகுறிச்சியை சேர்ந்த மேக்சன் மனைவி ஷீபா (37). எம்.எஸ்.சி. பி.எட் முடித்துள்ள இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குமரியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 10 ஆண்டுகள் பேராசிரியையாக பணிபுரிந்தவர். 2013ல் இவருக்கும் ரதீஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது.
இதையும் படிங்க;- லாட்ஜில் ரூம் போட்டு படுக்கை அறையில் பெண் நிர்வாகியுடன் பாஜக தலைவர் உல்லாசம்? வீடியோ வைரல்..!
இதையடுத்து தனது கணவரிடம் விவகாரத்து பெற்று குழந்தைகளை விட்டுவிட்டு ரதீஷ்குமாருடன் செல்ல ஷீபா தயாராகி வந்தார். இதனிடையே சமீபத்தில் ரதீஷ்குமார் சென்னை ஐ.டி. துறையில் பணியாற்றும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளனர். திருமணத்திற்கு பின்னர் ஷீபா உடனான தொடர்பை துண்டித்தார். இதை தாங்க முடியாத ஷீபா பலமுறை ரதீஷ்குமாரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவர் ஷீபாவை முற்றிலும் புறக்கணித்துள்ளார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த ஷீபா அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க;- என்னை கட்டாயப்படுத்தி பலமுறை பலாத்காரம் செய்தார்.. என் சாவுக்கு அந்த பாஜக நிர்வாகி தான் காரணம்..!
ரதீஷ்குமாருக்கு போன் செய்து, கடைசி முறையாக எனது பிறந்த நாளில் உன்னை பார்க்க விரும்புகிறேன். இனி தொந்தரவு செய்யமாட்டேன். நான் உணவு கொண்டு வருகிறேன். ஒன்றாக சாப்பிடலாம் என்று கூறி கெஞ்சியுள்ளார். இதனால் அவரும் வரும்படி கூறியுள்ளார். இதற்காக வீட்டில் அறுசுவை உணவு சமைத்து அதில் தூக்க மாத்திரை கலந்து எடுத்துச் சென்றுள்ளார்.
இதை சாப்பிட்டதும் ரதீஷ்குமார் தள்ளாடினார். திடீரென ஷீபா கையோடு கொண்டு வந்திருந்த கத்தியால் ரதீஷை சரமாரியாக குத்தினார். 40க்கும் மேற்பட்ட குத்துகளால் ரத்த வெள்ளத்தில் ரதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஷீபாவை கைது செய்தனர். இதையடுத்து போலீசார் ரதீஷ்குமார் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க;- கள்ளக்காதலன் நான் இருக்கும்போது வேற ஒருத்தவங்க கிட்ட போற.. ஓயாமல் டார்ச்சர்.. பெண் செய்த பகீர் சம்பவம்.!