லாட்ஜில் ரூம் போட்டு படுக்கை அறையில் பெண் நிர்வாகியுடன் பாஜக தலைவர் உல்லாசம்? வீடியோ வைரல்..!

By vinoth kumar  |  First Published Jul 14, 2022, 7:50 AM IST

மாவட்ட பாஜக தலைவர் ஒருவர் பெண்ணுடன் படுக்கையறையில்இருந்த வீடியோ காட்சிகள் வைரலான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மாவட்ட பாஜக தலைவர் ஒருவர் பெண்ணுடன் படுக்கையறையில்இருந்த வீடியோ காட்சிகள் வைரலான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடதத்தி வருகின்றனர். 

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்ட பாஜக தலைவர் ஸ்ரீகாந்த் தேஷ்முக் என்பவர் பாஜக பெண் நிர்வாகி ஒருவரும் படுக்கையறையில் இருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அந்தத வீடியோ இடம் ஓட்டல் அறையில் எடுக்கப்படுள்ளது. தொடர்ந்து அந்த பெண் வீடியோவில் ஸ்ரீகாந்த் தேஷ்முக் என்னை ஏமாற்றிவிட்டார்.  திருமணமான அவர் என்னுடன் தொடர்பில் இருந்தார். தற்போது என்னிடம் கேமராவை பறித்துக் கொண்டார் என்று கூறினார்.

Tap to resize

Latest Videos

இந்த வீடியோ அந்த பெண்ணால் எடுக்கப்பட்டுள்ளது. வீடியோ வைரலானதை அடுத்து ஸ்ரீகாந்த் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், ராஜினாமா செய்ததற்கான காரணத்தை அந்த கடிதத்தில் அவர் தெரிவிக்கவில்லை. அப்படி இருந்து அவரது ராஜினாமா கடிதத்தை பாஜக மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீஸ் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில்,  வைரலான வீடியோவில் உள்ள பெண் ஸ்ரீகாந்த் மீது மோசடி புகார் அளித்துள்ளார். இதனிடையே, ஸ்ரீகாந்த் தேஷ்முக் தரப்பில் அந்த பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், என்னை பிளாக் மெயில் செய்து அந்த பெண் ரூ.2 கோடி கேட்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு புகார் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

click me!