"அவள எனக்கு விட்டுறு"... 41 வயது ஆன்ட்டி-காக கணவன் முகத்தில் ஆசிட் அடித்த 27 வயது கள்ளக் காதலன்..

Published : Jul 14, 2022, 09:31 PM ISTUpdated : Jul 14, 2022, 09:36 PM IST
"அவள எனக்கு விட்டுறு"... 41 வயது ஆன்ட்டி-காக கணவன் முகத்தில் ஆசிட் அடித்த 27 வயது கள்ளக் காதலன்..

சுருக்கம்

மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த நிலையில் அதை தட்டிக்கேட்ட கணவன் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.     

மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த நிலையில் அதை தட்டிக்கேட்ட கணவன் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனை பேச வருமாறு அழைத்து அவர் முகத்தில் கள்ளக்காதலன் ஆசிட் வீசியுள்ளார். இதில் போலீசார் கள்ளக்காதலனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பெரும்பாலான கொலை தற்கொலைகள் திருமணத்துக்கு புறம்பான உறவை மையமாக வைத்தே அரங்கேறி வருகிறது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடு  மூன்றாவது உறவுக்கு வழி வகுக்கிறது. இதுபோன்ற வழிதவறி உறவுகள் கொலை தற்கொலைக்கு அவர்களை தள்ளிவிடுகிறது. இது போன்ற முறையற்ற சம்பவங்கள்  பரவலாக அரங்கேறி வருகிறது. இந்த வரிசையில் கணவன் இருக்கும்போதே கள்ளக்காதலில் மனைவி ஈடுபட்டு வந்த நிலையில் அது வன்முறையில் முடிந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:-

இதையும் படியுங்கள்: நீ பாலியல் தொழில் பண்றியாடி.?? கல்லூரி மாணவிக்கு நள்ளிரவில் போன் போட்டு போலீஸ்காரர் செய்த அசிங்கம்..

திருப்பூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (47) கட்டிடத் தொழிலாளியாக இருந்து வருகிறார், இவரது மனைவி வேண்டா அம்மாள் (41) கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார், இந்நிலையில் கணவர் குடிக்கு அடிமையானவர் என்றும், சந்தேகப் பேர்வழி என்றும் கூறப்படுகிறது, இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த ஓராண்டாக இருவரும் பிரிந்து தனித் தனியே வாழ்ந்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: அத்தைமீது ஏற்பட்ட விபரீத ஆசை.. வாடகைக்கு வீடு எடுத்து இஷ்டத்துக்கு உல்லாசம் ... தனி அறையில் நடந்த கொடூரம்.

இந்நிலையில் ஆம்பூரில் உள்ள சூ பேஃக்ட்டரியில் வேண்டம்மாள் வேலை செய்து வந்தார், அப்போது அங்கு ராணிப்பேட்டை சேர்ந்தார் சக்திவேல் (27)  பொக்லைன் இயந்திர டிரைவர் பணி செய்து வந்தார், அப்போது கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த வேண்டம்மாளுக்கும் சக்திவேலுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது. பிறகு இருவரும் தொலைபேசியில் பல மணிநேரம் பேசி வந்தனர், கணவனைப் பிரிந்து வேண்டம்மாள் தனியாக இருப்பதை அறிந்த சக்திவேல், வேண்டம்மாளுடன் உல்லாசமாக இருக்க முடிவு செய்தார். 

இரு கட்டத்தில் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர், இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். மனைவிக்கு வேறு ஒரு இளைஞருடன் தொடர்பு இருப்பது ராமனுக்கு தெரிந்தது, இதனையடுத்து மனைவியையும் கள்ளக்காதலன் சக்திவேலையும் ராமன் கண்டித்தார், இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது, இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி  ராமனை சக்திவேல் பேச வருமாறு அழைத்துள்ளார், பிரச்சினையை பேசி முடிக்கலாம் என எண்ணிய ராமனும் சக்திவேலை சந்திக்க சென்றார். அப்போது சாணம் குப்பம் சுடுகாட்டில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

அங்கு இருவரும் மது அருந்தினர், பின்னர் இருவரும் பிரியாணி சாப்பிட்டனர், அப்போது வேண்டம்மாள் குறித்து பேச ஆரம்பித்ததில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்து சக்திவேல் ஏற்கனவே திட்டமிட்டு கையில் கொண்டு வந்திருந்த ஆசிட்டை இராமன் முகத்தில் வீசினார். அதில் ராமன் படுகாயம் இடைந்தார், வலி தாங்கமுடியாமல் அலறினார். இதைக் கண்ட பொதுமக்கள் ராமனை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் படுகாயத்துடன் ராமன் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக் காதலன் சக்திவேலை கைது செய்து விசாரித்து வருகிறார். 
 

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்