மனைவியை கொன்ற சைகோ கணவர்… குழந்தைகள் முன்பு கொப்பரையில் கொதிக்கவைத்த கொடூரம்!!

Published : Jul 14, 2022, 08:20 PM IST
மனைவியை கொன்ற சைகோ கணவர்… குழந்தைகள் முன்பு கொப்பரையில் கொதிக்கவைத்த கொடூரம்!!

சுருக்கம்

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி, சிந்து மாகாணத்தில் ஒருவர் தனது மனைவியைக் கொன்று, தனது குழந்தைகள் முன்னிலையில் கொப்பரையில் கொதிக்கவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி, சிந்து மாகாணத்தில் ஒருவர் தனது மனைவியைக் கொன்று, தனது குழந்தைகள் முன்னிலையில் கொப்பரையில் கொதிக்கவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜவுர் ஏஜென்சியைச் சேர்ந்த ஆஷிக் என்பவர் நகரின் குல்ஷன்-இ-இக்பால் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார். இவர் தான் பணிபுரியும் அதே பள்ளியின் ஊழியர் குரிடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கு நர்கிஸ் என்ற பெண்ணுடன் திருமணமாகி 6 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று நர்கிஸை கொலை செய்த ஆஷிக், தனது 6 குழந்தைகள் முன்னிலையில் உடலை பள்ளியின் சமையலறையில் உள்ள கொப்பரையில் கொதிக்கவைத்துள்ளார். இதை கண்டு குழந்தைகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க: நீ பாலியல் தொழில் பண்றியாடி.?? கல்லூரி மாணவிக்கு நள்ளிரவில் போன் போட்டு போலீஸ்காரர் செய்த அசிங்கம்..

அப்போது அங்கிருந்து தப்பி ஓடிய அவரது 15 வயது மகள் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதுக்குறித்து பொலிஸார் கூறுகையில், பாஜவுர் ஏஜென்சியைச் சேர்ந்த பெண்ணின் கணவர் ஆஷிக் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்தார் மற்றும் சுமார் எட்டு முதல் ஒன்பது மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளியின் வேலையாள் குடியிருப்பில் வசித்து வந்தார். கொடூரமான சம்பவத்தைத் தொடர்ந்து ஆஷிக் தனது மூன்று குழந்தைகளுடன் தப்பி ஓடிய பின்னர் பாதிக்கப்பட்டவரின் 15 வயது மகள் அவர்களை அழைத்ததாக போலீசார் தெரிவித்தனர். மாவட்ட கிழக்கு மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) அப்துர் ரஹீம் ஷெராசி, மற்ற மூன்று குழந்தைகளின் காவலில் காவல்துறை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: என்னுடன் பேச மாட்டியா சொல்லு.. சிறுவன் செய்த செயலால் வலி தாங்க முடியாமல் கதறிய கல்லூரி மாணவி

மேலும் அவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாகவும் எஸ்எஸ்பி ஷெராசி தெர்வித்தார். மேலும் நர்கிஸ் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுக்குறித்த முதற்கட்ட விசாரணைகள் மற்றும் குழந்தைகளின் வாக்கு மூலங்கள் அடிப்படையில், ஆஷிக், தனது மனைவியை தலையணையால் முகத்தில் அமுக்கி கொலை செய்துவிட்டு, பின்னர் கொப்பரையில் கொதிக்க வைத்ததாக அதிகாரி தெரிவிக்கின்றனர். மேலும் உயிரிழந்த பெண்ணின் கால்களில் ஒன்று அவரது உடலில் இருந்து துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், கணவன் தனது மனைவியை தகாத உறவில் ஈடுபட வற்புறுத்தியதாகவும், அதற்கு அவர் மறுத்ததால் கொலை செய்ததாகவும் ஊகிக்கப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய் ஆஷிக்கை தேடி வருகின்றனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை