நீ பாலியல் தொழில் பண்றியாடி.?? கல்லூரி மாணவிக்கு நள்ளிரவில் போன் போட்டு போலீஸ்காரர் செய்த அசிங்கம்..

By Ezhilarasan Babu  |  First Published Jul 14, 2022, 7:29 PM IST

நள்ளிரவில் கல்லூரி மாணவிக்கு போன் செய்து போலீஸ் ஒருவர் ஆபாசமாக பேசியுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த போலீஸ்காரர் அந்த மாணவியை பாலியல் தொழில் செய்கிறாயா? 


நள்ளிரவில் கல்லூரி மாணவிக்கு போன் செய்து போலீஸ் ஒருவர் ஆபாசமாக பேசியுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த போலீஸ்காரர் அந்த மாணவியை பாலியல் தொழில் செய்கிறாயா? என கேட்டு இரவு முழுவதும் தொல்லை கொடுத்துள்ளார், அவரது காதலரை விபச்சார வழக்கில் போட்டு விடுவேன் என மிரட்டியுள்ள ஆடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

காவலர்கள் தங்களது காக்கி சட்டை அதிகாரத்தை பல இடங்களில் துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சில நேரங்களில் அவர்கள் ஆதாரத்துடன் சிக்கி அவமானப்படும் சம்பவங்களும் நடந்து வருகிறது, இந்த வரிசையில் கல்லூரி மாணவியை ஆபாசமாக பேசி போலீஸ்காரர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: உன் புருஷன விட்ரு.. நினைக்கும் போதெல்லாம் பயிற்சி மருத்துவரை அறைக்கு அழைத்து உடலுறவு.. 52வயது Dr. அட்டூழியம்.

undefined

சென்னை மதுரவாயில் புறவழிச்சாலை போரூர் சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் இரவு காரில் கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ரோந்து வந்த காவலர்கள் இருவர்  காரில் இருந்தவர்களை அங்கு நிற்கக்கூடாது என எச்சரித்தனர். அப்போது  அந்த கல்லூரி மாணவி நாங்களிருவரும் காதலர்கள் தான் என்றும் குடும்ப சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என கூறியுள்ளனர். ஆனால் அதை ஏற்காத அந்த போலீஸ்காரர்கள் நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்து போங்கள், இங்கு இருக்கக் கூடாது என அவர்களை விரட்டியுள்ளனர். 

அத்துடன் அந்தப் பெண்ணின் தொலைபேசி எண், மற்றும் முகவரியை வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்துள்ளனர், இந்நிலையில் அந்த இரு காவலர்களில் ஒருவரான மதுரவாயில் காவல்நிலைய குற்ற பிரிவில் பணியாற்றி வரும் கிருஷ்ணகுமார் என்பவர், நேற்று நள்ளிரவு அந்த கல்லூரி மாணவிக்கு போன் செய்து உனது தொலைபேசி எண்ணை உனது  நண்பர்கள் கொடுத்தார்கள், நேற்று முன்தினம் இரவு டோல்கேட் அருகே நீங்கள் பிடிபட்டீர்கள், நீ பாலியல் தொழில் செய்வது எனக்கு தெரியும் என அந்த மாணவியை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார். தயவு செய்து தவறாக பேசாதீர்கள் என பல முறை சொல்லியும் அந்த காவலர் கேட்கவில்லை, இதனால் ஒரு கட்டத்தில் கொதிப்படைந்த அந்த மாணவி, தனது காதலருக்கு போன் செய்து காவலர் தன்னிடம் அனாவசியமாக பேசுவதாக கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: அத்தைமீது ஏற்பட்ட விபரீத ஆசை.. வாடகைக்கு வீடு எடுத்து இஷ்டத்துக்கு உல்லாசம் ... தனி அறையில் நடந்த கொடூரம்.

பின்னர் அந்த பெண்ணின் காதலரும் அந்த காவலருக்கு போன் செய்து கண்டித்துள்ளார். இந்நிலையில் போலீஸ்காரர் கிருஷ்ணகுமார் அந்த பெண்ணுக்கு இரவு முழுவதும் வாய்ஸ் மெசேஸ் மற்றும் ஆபச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். அந்தப் பெண்ணை தொடர்ந்து பாலியல் தொழிலாளி என்றும் நீயும் உன் காதலரும் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு வர வேண்டும் என்றும் மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலர் ஆகியோர் போனில் தொல்லை கொடுத்து மிரட்டிய இன்று மதுரவாயில் காவலர் கிருஷ்ணகுமார் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

இரவில் போன் செய்து ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தது மற்றும் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்தது என அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார். இந்நிலையில் காவல் ஆணையர் அறிவுறுத்தலின் பேரில் சம்பந்தப்பட்ட காவலர் கிருஷ்ணகுமாரை துணை ஆணையர் துறைரீதியான விசாரணை  நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலர் கல்லூரி மாணவியை தரக்குறைவாக பேசிய ஆடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
 

click me!