எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அண்ணியுடன் உல்லாசம்.. கடுப்பில் இருந்த கொழுந்தன் என்ன செய்தார் தெரியுமா?

Published : Oct 04, 2022, 10:16 AM IST
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அண்ணியுடன் உல்லாசம்.. கடுப்பில் இருந்த கொழுந்தன் என்ன செய்தார் தெரியுமா?

சுருக்கம்

அண்ணியுடனான கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் வாலிபர் கழுத்து நெரித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அண்ணியுடனான கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் வாலிபர் கழுத்து நெரித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் மொஜப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிவிஜிகுமார்(22), பங்காஜூ பசுவான்(25) ஆகியோர் கிருஷ்ணகிரியில் தங்கி தனியார் குடியிருப்பில் கட்டிட வேலை செய்து வந்தனர். இருவரும் அதேபகுதியில் ஒரே அறையில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் சிவிஜிகுமார் ஒப்பந்தக்காரர் ஜெயக்குமார் என்பவரை போனில் தொடர்பு கொண்டு பங்காஜூ பசுவானை திடீரென காணவில்லை என தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த ஜெயக்குமார் காணாமல் போன பங்காஜுவை தேடும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது,  தங்கியிருக்கும் அறையின் அருகேயுள்ள முட்புதரில் பங்காஜூ பசுவான் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பங்காஜூ பசுவான் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் அவருடன் தங்கியிருந்த சிவிஜிகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இறுதியில்  பங்காஜூ பசுவானை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த கொலை பல்வேறு அதிர்ச்சி தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர். பீகாரில் இருக்கும் சிவிஜிகுமாரின் அண்ணியுடன் பங்காஜூ பசுவானுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சிவிஜிகுமார் அவரை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. இதனிடையே கடந்த 3 நாட்களுக்கு முன் சிவிஜிகுமார், பங்காஜூ பசுவானை ஆசைவார்த்தை கூறி வேலைக்கு அழைத்து வந்து  கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவிஜ்குமாரை கைது செய்தனர். 

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்