கோவையில் செவிலியரை குத்தி கொலை செய்த கணவன் தற்கொலைக்கு முயற்சி

By Dinesh TGFirst Published Oct 3, 2022, 8:46 PM IST
Highlights

கோவையில் பிரபல தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் மனைவியை கணவனே  சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிக்க வழி இல்லாததால் தற்கொலைக்கு முயன்ற சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்த நான்சி என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவருக்கும் 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதனிடையே நான்சி  பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துமனையில் செவிலியர் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த வினோத் அவ்வபோது நான்சியுடன் பிரச்சினையில் ஈடுபட்டு வந்ததால் கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர். 

குழந்தை பிறந்து 10 நாட்களில் பணிக்கு திரும்பிய தாம்பரம் மேயர் - பொதுமக்கள் நெகிழ்ச்சி

இந்த நிலையில் தனது மனைவி நான்சிக்கும் மற்றொரு நபருக்கும் பழக்கம் இருப்பதாக சந்தேகமடைந்த வினோத் இன்று காலை வழக்கமாக நான்சி மருத்துவமனைக்கு பணிக்கு வந்தபோது கத்தியுடன் பின் தொடர்ந்துள்ளார். பின்னர்  3 மணியளவில் நான்சி பணிபுரியும் மகப்பேறு பிரிவிற்கு சென்ற அவர்  தான் மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியை கொண்டு நான்சியை சர மாரியாக குத்தியுள்ளார். இதில்  சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் நான்சி பரிதாபமாக  உயிரிழந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் சம்பவம் நிகழ்ந்த சூழலில்  நான்சியின் அலறல் சத்தம் கேட்ட சக ஊழியர்கள் அங்கு வந்து பார்த்த போது வினோத் தப்பியோட முயற்சித்துள்ளார். ஆனால் மருத்துவமனை காவலர்கள் அவரை மடக்கி பிடித்தனர். அப்போது மனைவியை கொலை செய்த அதே கத்தியால் தானும் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்த மருத்துவமனை ஊழியர்கள் சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

பேனர்களால் மக்களுக்கு அசம்பாவிதம் நேர்ந்தால்..... மாவட்ட ஆட்சியர் பகிரங்க எச்சரிக்கை

தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர் சக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கணவன், மனைவி இடையே ஏற்கனவே குடும்ப பிரச்சிணை இருந்து வந்ததும் தன்னை விடுத்து பிற ஆண்களுடன் பழக்கம் வைத்ததால் இந்த கொலை சம்பவத்தில் அவர் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

 

click me!