நாமக்கல் மாவட்டம் பதுச்சத்திரம் பகுதியில் உள்ள நவனி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(22). இவர் 12ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது தன்னுடன் படித்த நந்தினி (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தமிழ் செல்வன் மரம் வெட்டும் கூலி வேலை செய்து வருகிறார்.
நாமக்கல் அருகே எவ்வளவு சொல்லியும் கள்ளக்காதலை கைவிட மறுத்த காதல் மனைவி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பதுச்சத்திரம் பகுதியில் உள்ள நவனி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(22). இவர் 12ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது தன்னுடன் படித்த நந்தினி (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தமிழ் செல்வன் மரம் வெட்டும் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வீட்டின் அருகில் உள்ள ரமேஷ் மெடிக்கல்ஸ் மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது கடை உரிமையாளர் ரமேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக தமிழ் செல்வன், கடந்த ஓராண்டுக்கு முன்னரே மனைவியை கண்டித்ததோடு வேலைக்கு செல்ல வேண்டாம் வீட்டிலேயே இருக்குமாறு கூறியுள்ளார்.
ஆனாலும், இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்து வந்துள்ளது. இதனால், கடும் ஆத்திரமடைந்த தமிழ் செல்வன் நந்தினிடம் தகராறில் ஈடுப்பட்டார். ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற கணவர் அங்கு இருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சாய்ந்த நந்தினி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தின் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நந்தினியில் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் கணவரை தேடி வருகின்றனர். கள்ளத்தொடர்பால் அம்மா கொலை செய்யப்பட்டு தந்தை தலைமறைவாக உள்ளதால் 3வது குழந்தை ஆதரவு இல்லாமல் தவித்து வருகிறது. கள்ளத்தொடர்பால் காதல் மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.