பல பெண்களுடன் கள்ளத்தொடர்பால் கொலை.. ஊராட்சி மன்ற தலைவரின் மகன் உள்பட 2 பேர் பரபரப்பு வாக்குமூலம்..!

Published : Dec 05, 2021, 03:46 PM IST
பல பெண்களுடன் கள்ளத்தொடர்பால் கொலை.. ஊராட்சி மன்ற தலைவரின் மகன் உள்பட 2 பேர் பரபரப்பு வாக்குமூலம்..!

சுருக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட  கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர்  திருநாவுக்கரசு (42). விவசாயி. இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த டிசம்பர் 1ம் தேதி தனது வயலுக்கு சென்றார். மாலை வரையும் வீடு திரும்பாததால் உறவினர்கள் திருநாவுக்கரசை தேடி வயல் பகுதிக்கு வந்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட  கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர்  திருநாவுக்கரசு (42). விவசாயி. இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த டிசம்பர் 1ம் தேதி தனது வயலுக்கு சென்றார். மாலை வரையும் வீடு திரும்பாததால் உறவினர்கள் திருநாவுக்கரசை தேடி வயல் பகுதிக்கு வந்துள்ளனர். 

அப்போது, உடல் மற்றும் கண்களில்  ரத்த காயங்களுடன்  தண்ணீரில் முழ்கியபடி  திருநாவுக்கரசு உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக உடனே நயினார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திருநாவுக்கரசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே,  திருநாவுக்கரசு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால்  உடலை வாங்க மாட்டோம்  என உறவினர்கள் தெரிவித்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில்  ஈடுட்டனர். 

தனிப்படை அமைத்து குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்  என எஸ்பி உறுதியளித்ததை தொடர்ந்து உறவினர்கள் திருநாவுக்கரசு வாங்கி கொன்றனர். இக்கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில்  கிளியூரை சேர்ந்த  ஊராட்சி மன்ற தலைவரின் மகன் ஜீவானந்தம்(19), முத்துப்பாண்டி(19) ஆகியோரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது, கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் உறவுக்கார பெண்களுடன்  கள்ளத்தொடர்வு  வைத்திருந்ததால்  கம்பால் அடித்து தண்ணீருக்குள்  மூழ்கடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை