இளம்பெண்ணை வதைத்த வார்டன்... அய்யோ பாவம் இப்படியொரு கொடுமையா..? அதிர வைக்கும் வீடியோ..!

By Thiraviaraj RMFirst Published Dec 5, 2021, 1:39 PM IST
Highlights

ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள்  ஒப்பந்த அடிப்படையில் வெளியூர்களில் இருந்து வரும் பெண்களை வேலைக்கு சேர்த்து கொடுமைகள் செய்வதாக பல்வேறு தரப்புகளிடம் இருந்தும் புகார்கள் எழுந்து வருகின்றன.

கோவையில் வேலைக்கு வர மறுத்த வடமாநில பெண்ணை இரும்புக் கம்பியால் தாக்கிய மேலாளரின் கொடூரச்செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோ வெளியானதால் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

கோவையில் தனியார் ஸ்பின்னிங் மில்லில் வடமாநில பெண் தொழிலாளியை மேலாளர் கொலைவெறியுடள் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் சரவணம்பட்டி பகுதியில் தனியார் ஸ்பின்னிங் மில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, உள்ளூர் மட்டுமின்றி 30க்கும் மேற்பட்ட வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் வேலைக்கு வர மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், அந்த பெண் தங்கியிருந்த ஸ்பின்னிங் மில் விடுதியில் வார்டன் லதா மற்றும் மேலாளார் முத்தையா ஆகியோர் கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால் அந்த பெண் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு சமூக வலைதளங்களில் பல கண்டனங்கள் எழுந்த நிலையில் கோவை மாவட்ட காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த சம்பவம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூல் ஆலை விடுதியில் நடைபெற்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து பெரும் கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில் சரவணம்பட்டி காவல் துறையினர் அந்த விடுதியின் காப்பாளர் லதா, மேலாளர் முத்தையா ஆகிய இருவரை கைது செய்து பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

__

கோவை காந்திபுரத்தில் தனியார் spinning millsல் வேலைக்கு இருக்கும் பெண்ணை ஒருவர் அடிக்கும் காட்சி
.
.
🔼
. pic.twitter.com/gvXwt5dBgU

— அருண்காந்த் (எ) AK ™ (@iamHarunKanth)

 

இளம்பெண்களை திருப்பூர், கோவை, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனங்கள், நூட்பாலைகள் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள்  ஒப்பந்த அடிப்படையில் வெளியூர்களில் இருந்து வரும் பெண்களை வேலைக்கு சேர்த்து கொடுமைகள் செய்வதாக பல்வேறு தரப்புகளிடம் இருந்தும் புகார்கள் எழுந்து வருகின்றன. அதில் ஒரு சில நிகழ்வுகள் மட்டுமே வெளியே தெரிய வருகின்றன. இவைகளை அரசு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் பலரும். 

click me!