பொண்டாட்டி பார்த்துக்கோ சொல்லிட்டு போனது ஒரு குத்தமா? விஷயம் தெரிந்து பாரினில் இருந்து பறந்து வந்த கணவர் கொலை

Published : Mar 19, 2022, 08:38 AM ISTUpdated : Mar 19, 2022, 08:39 AM IST
பொண்டாட்டி பார்த்துக்கோ சொல்லிட்டு போனது ஒரு குத்தமா? விஷயம் தெரிந்து பாரினில் இருந்து பறந்து வந்த கணவர் கொலை

சுருக்கம்

தனது மனைவிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் படி குமரனிடம் கூறிவிட்டு வெங்கடேசன் சென்றுள்ளார்.  அவரும் அனைத்து உதவிகளையும் செய்து வந்த நிலையில் விஜயலட்சுமிக்கும், குமரனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

கள்ளத்தொடர்பு விவகாரம் தெரிந்து வெளிநாட்டில் இருந்து வந்த கணவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்தோம் என கள்ளக்காதலனுடன் கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 
 
வெளிநாட்டுக்கு சென்ற கணவர்

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் வெங்கடேசன் (40). ரிக் வண்டி ஆபரேட்டர். இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தை சேர்ந்த விஜயலட்சுமி (34) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹரிகரன் (13), சுப்பிரியா (6) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். சேலம் மிட்டபுதூரை சேர்ந்தவர் குமரன் (30). இவர் விஜயலட்சுமியின் தங்கை சரஸ்வதியை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டனர். இதையடுத்து குமரன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார்.

கள்ளத்தொடர்பு

மனைவியின் தங்கையை திருமணம் செய்திருந்ததால் வெங்கடேசனுக்கும், குமரனுக்கும் பழக்கம் இருந்து வந்தது. இச்சூழலில் வெங்கடேசன், ஆத்தூரில் இருந்து அழகாபுரத்தில் வந்து குடியேறினார். இதனிடையே, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசன், கோவையில் உள்ள கம்பெனி மூலமாக தென்ஆப்ரிக்காவுக்கு வேலைக்கு சென்றார். அப்போது தனது மனைவிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் படி குமரனிடம் கூறிவிட்டு வெங்கடேசன் சென்றுள்ளார். 
அவரும் அனைத்து உதவிகளையும் செய்து வந்த நிலையில் விஜயலட்சுமிக்கும், குமரனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து வந்த கணவர் கொலை

இந்நிலையில், விஜயலட்சுமியும், குமரனும் திடீரென போலீசில் சரணடைந்தனர். இருவரும் சேர்ந்து வெங்கடேசனை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி உடலை கிணற்றில் வீசிவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில்;- விஜயலட்சுமியின்  கணவர் வெங்கடேசன் தென்ஆப்ரிக்காவில் இருந்து கடந்த 10ம்தேதி சேலம் வந்ததாகவும், வந்தவுடன் தனக்கு குமரனுக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பை அறிந்து தன்னை கடுமையாக அடித்தார். 

சிறையில் அடைப்பு

இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் இருவரும் சேர்ந்து அவரை கொன்று கிணற்றில் வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று, கிணற்றுக்குள் கிடந்த சாக்குமூட்டையை வெளியே எடுத்தனர். அதனுள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வெங்கடேசன் சலமாக கிடந்தார். இதனையடுத்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!