இளம்பெண் தனக்கு முன் சீட்டில் உட்கார்ந்திருந்த மாணவிக்கு பின் பக்கமாக தகாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், அவரை கண்டித்தார். ஆனாலும், அவர் பாலியல் சீண்டலை தொடர்ந்தார்.
அரசு பேருந்தில் ஐஏஎஸ் படிக்கும் மாணவிக்கு நடத்துனர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடூத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஏஎஸ் படிக்கும் மாணவி
undefined
திருவண்ணாமலையை சேர்ந்த 22 வயது இளம்பெண் கோவை காந்திபுரத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்து, ஐஏஎஸ் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இதற்கிடையில் சொந்த ஊருக்கு சென்ற அந்த இளம்பெண், மீண்டும் கோவைக்கு செல்வதற்காக கடந்த 16-ம் தேதி இரவில் திருவண்ணாமலையில் இருந்து சேலம் சென்று அங்கிருந்து அரசு பேருந்தில் கோவைக்கு புறப்பட்டார். அந்த பேருந்தில் நடத்துனராக ஈரோடுட்டை சேர்ந்த பூவேந்திரன் (31) பணியாற்றினார்.
பாலியல் தொல்லை
இந்நிலையில், அந்த இளம்பெண் தனக்கு முன் சீட்டில் உட்கார்ந்திருந்த மாணவிக்கு பின் பக்கமாக தகாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், அவரை கண்டித்தார். ஆனாலும், அவர் பாலியல் சீண்டலை தொடர்ந்தார். கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே வந்ததும், பாலியல் தொல்லையை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த இளம்பெண் சத்தம்போட்டு கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பேருந்து ஓட்டுநர் நிறுத்தினார். பின்னர் சக பயணிகள், அவரிடம் விசாரித்தனர். அப்போது நடத்துனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி கதறி அழுதுள்ளார்.
கண்டக்டர் கைது
இதையடுத்து காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்ததும் சக பயணிகள் உதவியுடன் நடத்துனர் பூவேந்திரனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூவேந்திரனை கைது செய்தனர்.