வகுப்பறையில் அவமானப்படுத்திய ஆசிரியரை 30 ஆண்டுகள் கழித்து பழி வாங்கிய மாணவர் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வகுப்பறையில் அவமானப்படுத்திய ஆசிரியரை 30 ஆண்டுகள் கழித்து பழி வாங்கிய மாணவர் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரேசில் நாட்டில் வாழ்ந்து வந்தவர் மரியா வெர்லிண்டன் ஆண்ட்வெர்பில். ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், தனது வீட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு மர்மமான முறையில் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பல கட்டமாக விசாரணை செய்த காவல்துறையினர், கொலையை யார் செய்தது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர். காவல்துறைக்கு இந்த வழக்கு பெரும் சவாலாக அமைந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கொலையாளி தானே வந்து சிக்கியிருக்கிறார். உவென்ட்ஸ் என்கிற வாலிபர், அந்த ஆசிரியரை கொலை செய்ததாக தனது நண்பரிடம் கூறியிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நண்பர், நண்பனாக இருந்தாலும் செய்தது மிக மோசமான செயல் என்பதால் போலீசாரிடம் இதுப்பற்றி தெரிவித்திருக்கிறார். இதைக் கேட்ட காவல்துறையினர், உடனடியாக உவென்ட்ஸை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் ஒன்றை கூறியிருக்கிறார் உவென்ட்ஸ். அதை கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், 1990 ஆம் ஆண்டில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது மரியா வெர்லிண்டன் ஆண்ட்வெர்பில் தனக்கு ஆசிரியராக இருந்தார்.
அவர் ஒருநாள் என்னை வகுப்பறையில் அவமானப் படுத்திவிட்டார். இதனால் ஆசிரியரை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். ஆனால் என்னால் உடனடியாக பழிவாங்க முடியவில்லை. ஆனால் பழிவாங்க வேண்டும் என்ற வெறி மட்டும் என்னைவிட்டு போகவே இல்லை. 30 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்த நான் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆசிரியரின் வீட்டிற்கு சென்று அவரை 101 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி வந்திருக்கிறேன் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார். வாக்குமூலத்தை பெற்றுக் கொண்ட போலீசார் உவெண்ட்ஸ்ஐ கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.