உடல் ரீதியா ஒன்னு சேர்ந்துட்டா, ஊரே நம்மள சேர்த்து வைக்கும்... வீட்டிற்கே போய் உல்லாசம் அனுபவித்த இளைஞன்.

Published : Sep 08, 2022, 08:28 PM IST
உடல் ரீதியா ஒன்னு சேர்ந்துட்டா, ஊரே நம்மள சேர்த்து வைக்கும்... வீட்டிற்கே போய் உல்லாசம் அனுபவித்த இளைஞன்.

சுருக்கம்

காதலன் ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு மோசடி செய்ததால் இளம்பெண் எலி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. உடல் ரீதியாக ஒன்று சேர்ந்து விட்டால் நம்மை எவராலும் பிரிக்க முடியாது எனக் கூறி அந்த இளைஞன் அந்தப் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்திருப்பது தெரியவந்துள்ளது.  

காதலன் ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு மோசடி செய்ததால் இளம்பெண் எலி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. உடல் ரீதியாக ஒன்று சேர்ந்து விட்டால் நம்மை எவராலும் பிரிக்க முடியாது எனக் கூறி அந்த இளைஞன் அந்தப் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்திருப்பது தெரியவந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, சூது மனம் படைத்தவர்கள் அன்பாக பேசி பெண்களிடம் காரியம் சாதித்துக்கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த வரிசையில் காதலிப்பது போல நடித்து இளம்பெண்ணை கற்பழித்து இளைஞரொருவர் மோசடி செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முழு விவரம் பின்வருமாறு:-

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி தோட்டா ஸ்டேஷனை சேர்ந்தவர் ராணி மேகலா என்கிற ராணி (20) இவர் இன்டர் வரை படித்துள்ளார், இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் என்ற இளைஞரும் பட்டப்படிப்பு படித்துள்ளார். ராணியும்- பிரதீப் குமாரும் கடந்த ஆறு மாத காலமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் ராணியுடன் பேசுவதை பிரதீப் குமார் நிறுத்திக் கொண்டனர், இந்நிலையில்தான் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மீண்டும் ராணியுடன் பிரதீப்குமார் பேசத்தொடங்கினார். அப்போது நாம் இருவரும் உடல் ரீதியாக ஒன்று சேர்ந்து விட்டால் ஒட்டுமொத்த ஊரும் நம்மை சேர்த்து வைத்துவிடும், குடும்பத்தினரும் நம் திருமணத்திற்கு சம்மதிப்பார்கள் என அந்தப் பெண்ணை ஆசைவார்த்தை கூறினார். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காதலியின் வீட்டுக்குச் சென்று பிரதீர் குமார் உடலுறவில் ஈடுபட்டார்.

பின்னர் மறுநாளே அந்தப் பெண்ணிடம் பேசுவதை பிரதீப் நிறுத்திக்கொண்டார், இதனால் கலக்கமடைந்த அந்தப் பெண் ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடந்த சம்பவத்தை தனது தாய் மஞ்சுவிடம் கூறினார், அவர் இதுகுறித்து  ஊர் பெரியவர்களிடம் முறையிட்டார், ஆனால் பிரதீப்பும் அவரது தாயாரும் ராணியை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்து விட்டனர். இதனால் மனமுடைந்த ராணி கடந்த 28 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது எலி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

முன்னதாக தான் எலி மருந்து சாப்பிட்டதை தனது தாயிடம் கூறினார், குடும்பத்தினர் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர், பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக விஜயவாடாவுக்கு கொண்டு சென்றனர், இந்நிலையில்தான் செவ்வாய்க்கிழமை அந்தப் பெண் உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

PREV
click me!

Recommended Stories

அறைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!